எடப்பாடி பழனிச்சாமி நண்பர் வீட்டில் சோதனை

 
el

 முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நண்பரும் கூட்டுறவு வங்கி மாநில தலைவருமான இளங்கோவன் வீட்டில் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடந்து வருகிறது.   தேர்தல் பறக்கும் படையினர் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.

 கடந்த அக்டோபர் மாதத்தில் இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர்.   அந்த சோதனையில் 21.2 கிலோ தங்கம்,  282 கிலோ வெள்ளி பொருட்கள்,  9.72 லட்சம் ரூபாய் ரொக்கம்,  சொகுசு கார்கள் மற்றும் மூன்று கணினி ஹார்ட் டிஸ்க்குகள்,  சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. 
 இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் சேலம் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் இளங்கோவன் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

 சேலம் மாவட்டம்  எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டம் என்பதால்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில் அனைத்து வார்டுகளையும் கைப்பற்ற அதிமுக தீவிரம் காட்டி வருகின்றது.   

ela

 சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி, ஆத்தூர், நரசிங்கபுரம், மேட்டூர், எடப்பாடி , தாரமங்கலம் என்று 6 நகராட்சிகள்,  31 பேரூராட்சிகள் என 599 வார்டுகளில் தேர்தல் நடைபெற இருக்கின்றன.  அனைத்து வார்டுகளையும் கைப்பற்றி விட வேண்டும் என்று அதிமுக தீவிரம் காட்டி வருகின்றது.

 எடப்பாடி பழனிச்சாமி சொந்த மாவட்டம் என்பதால் இத்தனை தீவிரம் காட்டி வரும் நிலையில்,   வெற்றிக்கணக்கில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.  எடப்பாடி பழனிச்சாமிக்கு மிக நெருக்கமாக இருக்கும் இளங்கோவனின் புத்திரகவுண்டன்பாளையம் வீட்டில் தான் அந்த பணம் பதுக்கி வைக்கப் பட்டிருக்கிறது என்றும் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

 இதையடுத்து சேலம் போலீசாரும் பறக்கும் படையினரும் இன்று காலை எட்டு முப்பது மணி முதல் இளங்கோவன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.