கவனிக்கச் சொன்ன எடப்பாடி! அத்தனை பேரும் தெறித்து ஓடிய கதை

 
ep

ஆரம்பத்திலிருந்தே எடப்பாடி பழனிச்சாமியும்,  ஓ .பன்னீர்செல்வமும் யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று தங்களது ஆதரவாளர்களை கணக்குப்போட்டு வைத்திருந்திருக்கிறார்கள்.  ஆனால் அவர்களே எதிர்பார்க்காத வகையில் கட்சியின் சீனியர்கள் ஜூனியர்கள் என்று பலரும் போட்டி போட்டுக்கிட்டு விருப்பமான செய்திருக்கிறார்கள்.

இரண்டு சீட் மட்டுமே இருக்கையில் 60க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு கொடுத்ததால் ஓபிஎஸ் -இபிஎஸ் இருவருமே திணறிப் போய் இருக்கிறார்கள்.  அந்த சீட்டுக்காக  பல சீனியர்கள் மோதிக்கொண்டிருக்க,  இதில் களத்தில் இல்லாத சீனியர்கள் பலரும் தலைமைக்கு எதிராக எம்எல்ஏக்களை தூண்டி விட்டிருக்கிறார்கள்.

ep

 எடப்பாடி அவரது ஆதரவாளருக்கு ஒரு சீட் கொடுக்க வேண்டுமென்று துடிக்கிறார்.  அதேபோல் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர் ஒருவருக்கு ஒரு சீட் கொடுக்க மும்முரமாக இருக்கிறார் .  அவரவர் லாபத்திற்கு அவரவர் மும்முரமாக இருக்கும் உங்களுக்கு என்ன குறைச்சல்? உங்களுக்கு ஏதாவது லாபம் வேண்டாமா? அதனால் உங்கள் பங்கிற்கு ஏதாவது கேளுங்கள்.   நீங்களெல்லாம் வாக்கு அளித்தால்தான் அந்த இரண்டு சீட்டும் வரமுடியும்.  உங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் அதிமுகவுக்கு 2 மாநிலங்களை எம்.பி. சீட்  கிடைத்து இருக்கிறது.  அதனால் உங்கள் பலத்தை நீங்கள் காட்ட வேண்டிய நேரம் இதுதான் என்று தூண்டி விட்டிருக்கிறார்கள்.

 அந்த சீனியர்கள் கட்சித் தலைமைக்கு எதிராக தூண்டி விட்டாலும் தலைமைக்கு இது  ரொம்பவே சாதகமாகி போயிருக்கிறது.  யார் வேட்பாளர்களாக வருகிறார்களோ அவர்கள் எங்களை கவனிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைக்க,   நாங்கள் ஓட்டுப் போடாமல் விட்டால் என்ன செய்வார்கள் என்று சிலர் எச்சரிப்பது மாதிரியே சொல்லி இருக்கிறார்கள்.

ad

 இதில் கொஞ்சம் அதிர்ந்து போன இபிஎஸ் பின்னர் இதுதான் சந்தர்ப்பம் என்று,  யார் வேட்பாளரா வருகிறாரோ அவர் எம்.எல்.ஏக்களை கவனிக்க வேண்டியது வரும் என்று  விரும்ப மனு கொடுத்தவர்களிடம் சொல்ல,  தெறித்து ஓடியிருக்கிறார்கள்.  லிஸ்ட்டில் 60க்கு மேற்பட்டவர்கள் இருந்த நிலையில்,   5 பேர் மட்டும் இருக்குற அளவுக்கு குறைஞ்சிருக்குது.  அத்தனை பேர் தெறித்து ஓடியிருக்கிறார்கள்.

அதில்தான் ஜெயக்குமார், சண்முகம், தர்மர் சையது கான் என்று இருந்திருக்கிறார்கள்.  அதிலும் வடிகட்டி சிவி சண்முகம், தர்மர் அறிவிக்கப் பட்டிருக்கிறார்கள். தலைமைக்கு எதிராக எம்எல்ஏக்களை சீனியர்கள் பலரும் தூண்டி விட்டாலும் இருப்பதோ 2 சீட்  60 பேரை எப்படி சமாளிப்பது என்று திணறிக் கொண்டிருந்த தலைமைக்கு இது ரொம்ப சுலபம் ஆகிவிட்டது.  கவனிக்கச் சொன்னதால் பலரும் தலைதெறிக்க ஓடிவிட,  லிஸ்ட்டில் எண்ணிக்கை குறைந்ததால் தலைமைக்கு எளிதாகி போயிருக்கிறது.