தாமதமாகும் மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்.. கே.சந்திரசேகர் ராவ் பாணியை பின்பற்றும் ஏக்நாத் ஷிண்டே?..

 
ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைத்து சுமார் 40 நாட்கள் தாண்டி விட்ட நிலையில் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கிளர்ச்சி சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஜூன் மாதத்தில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கத்துக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றது. இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவுக்கு பா.ஜ.க. ஆதரவு கரம் நீட்டியது.

மகாராஷ்டிராவில் சிவ சேனா அரசு ரொம்ப நாளைக்கு ஓடாது… தேவேந்திர பட்னாவிஸ் ஆருடம்

இதனையடுத்து மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் 30ம் தேதியன்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவ சேனா- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைத்தது. துணை முதல்வராக பா.ஜ.க.வின் தேவந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றார். அதுமுதல் இதுவரை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மட்டுமே அனைத்து துறைகளையும் கவனித்து வருகின்றனர். அமைச்சரவை விரிவாக்கம் அப்போது நடக்கும் இப்போது நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்து சுமார் 40 நாட்கள் ஆகிவிட்ட போதிலும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யவில்லை.

கே.சந்திரசேகர் ராவ்

அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாதற்கு காரணம் பா.ஜ.க.தான் காரணம் என கூறப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு பா.ஜ.க. இரண்டு வாக்குறுதி அளித்தது. முதல் வாக்குறுதி- ஷிண்டே முதல்வராக்குவது. இரண்டாவது வாக்குறுதி- அமைச்சரவையில் 3ல் 2 பங்கு ஷிண்டேவின் விசுவாசிகளுக்கு இடம். பா.ஜ.க. முதல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டது. ஆனால் தற்போது அமைச்சரவையில் தங்களுக்கு கூடுதல் வேண்டும் என்று பா.ஜ.க.விரும்புகிறது. இதனால்தான் அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போகிறது என கூறப்படுகிறது. அமைச்சரவை விரிவாக்கத்தை தாமதமாக மேற்கொண்டதில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் முதலிடத்தில் உள்ளார். தெலங்கானாவில் கே.சந்திரசேகர் ராவ்  ஆட்சி அமைத்து 61 நாட்கள் கழித்தே அமைச்சரவை விரிவாக்கம் செய்தார். இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே  (தற்போதைய நிலவரப்படி சுமார் 40 நாட்கள்) உள்ளார்.