ஓபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு
ஓபிஎஸ்- இபிஎஸ் தலைமையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில். கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, அதில் வரும் 23ஆம் தேதி பொது குழு மற்றும் செயற்குழு குறித்து ஆலோசனை நடைபெற்றது. அப்போது கட்சி அலுவலகத்திற்கு வெளியே திடீரென ஆயிரம் விளக்கு சேர்ந்த ஜான் கென்னடி என்பவர் ஒற்றை தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பினர். அப்போது அவருடன் வந்த சிலர் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
இதை அடுத்து மற்றொரு தரப்பினர் ஓபிஎஸ் தான் அதற்கு வரவேண்டும் என்று தங்கள் குரலை எழுப்பினார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக கட்சி அலுவலக நிர்வாகிகள் நேரடியாக வந்து சமரசத்திற்கு ஈடுபட்டு அவர்களை ஆசுவாசப்படுத்தினார். இதனிடையே கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், காலத்தின் கட்டாயத்தால் ஒற்றைத் தலைமை அவசியம் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறினார்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான ஆர்.வி.உதயகுமார், காமராஜ் ஆகியோர் சந்தித்து பேசினார். மேலும் எம்.சி.சம்பத், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஜே.சி.பி.பிரபாகர் உள்ளிட்டோரும் கூட்டாக ஓ.பி.எஸ்.ஸை சந்தித்து பேசினர்.