எடப்பாடி அனுப்பிய பைல் - ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம்

 
file

அதிமுகவின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டில் டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தார்.   அதன் பின்னர் அதிமுக அதிகார போட்டியால்  பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி, டிடிவி தினகரன்அணி,  சசிகலா அணி என்று நான்காக பிரிந்து இருக்கிறது.  இதில் டிடிவி தினகரன் அமமுக என்று  புதிய கட்சி தொடங்கி நடத்தி வருகிறார்.  ஆனாலும் அவர் அதிமுகவுடன் மீண்டும் இணைவதை விரும்புவதாக தெரிகிறது.  சசிகலா இப்போதும் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று அறிக்கை வெளியிட்டு வருகிறார்.  

eot

 அதேபோல் ஒற்றை தலைமை போட்டியால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஆக இருந்த பன்னீர் செல்வத்தை நீக்குவதாக அறிவித்துவிட்டு இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை அறிவித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி .  ஆனாலும் அதிமுகவின் பொருளாளர் என்று ஓபிஎஸ் இன்னமும் அறிக்கை வெளியிட்டு வருகிறார். 

 பழனிச்சாமியும் பன்னீர் செல்வமும் மாறி மாறி தங்களது மாவட்டச் செயலாளர்களையும் மாவட்ட ஒன்றிய செயலாளர்களையும் அறிவித்து வருகிறார்கள்.  எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவை கூட்டி ஓ .பன்னீர்செல்வம் அவர் ஆதரவாளர்களையும் கட்சியிலிருந்து நீக்கியதோடு புதிய பொறுப்பாளர்களையும் நியமித்தார். அதேபோல் ஓபிஎஸ் போட்டி பொது குழுவை கூட்ட திட்டமிட்டு இருப்பதாக தகவல் பரவுகிறது.

 அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த ஒற்றை தலைமை நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்து இருந்தார்.  தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.  இரண்டு நீதிபதிகள் அமர்வது இதை விசாரித்து ஒற்றை நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

al

 இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் , அவரது ஆதரவாளர் வைரமுத்துவும் மேல்முறையீடு செய்திருந்தனர்.  இந்த வழக்கு பலகட்ட விசாரணைகளுக்கு பின்னர் வரும் ஜனவரி மாதம் நாலாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.  நாடாளுமன்றத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் அதிமுகவில் அதிகாரம் யாருக்கு ?அதிமுகவின் சின்னம் யாருக்கு ? என்கிற போட்டி எழுந்திருக்கிறது.

 இந்நிலையில் ஓபிஎஸ் இன்று தனது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டி இருக்கிறார்.  இதற்கு போட்டியாக வரும் 27ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுகவில் நிலவும் இந்த பரபரப்பான சூழலில் ,  அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்காத சூழலில், அதிமுகவின் வரவு - செலவு குறித்து  எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த 29.09.2022 தேதியிட்ட, 03.10.2022 அன்று பைல் செய்யப்பட்ட, "Audited Annual Accounts FY 2021-22", தேர்தல் ஆணைய பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார் எடப்பாடி ஆதரவாளர் கௌரி சங்கர்.

அவர் மேலும்,  அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக கையெழுத்திட்டு, இதை எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்திருக்கிறார். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. எனில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும் ஏற்றது என்கிறார்.