டெல்லியில் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதில் ஊழல்... புள்ளிவிவரத்துடன் கெஜ்ரிவால் அரசை தாக்கிய பா.ஜ..க

 
அரவிந்த் கெஜ்ரிவால்

பள்ளிகள் கூடுதலாக வகுப்பறைகளில் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதாக புள்ளிவிவரத்துடன் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை பா.ஜ.க. தாக்கியுள்ளது.

பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில் டெல்லியில் புதிதாக 500 பள்ளிகள் அமைக்கப்படும் என்று உறுதியளித்தது. புதிய பள்ளிகள் வரவில்லை ஆனால், முன்கூட்டியே திட்டமிட்ட வகையில், மக்கள் நலத்துறையிடம் அறிக்கை கேட்டனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் உத்தரவின்பேரில், சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் என்றும், புதிய பள்ளிகள் கட்டப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது. 

டெல்லி அரசு பள்ளி

பள்ளிகளில் 2,400 அறைகள் தேவை, ஆனால் இது 7,180ஆக அதிகரிக்கப்பட்டது.  50 முதல் 90 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட கட்டுவதற்கான செலவு காட்டப்பட்டது. சி.பி.டபுள்யூ.டி.இ. கையேட்டின் விதிகளை புறக்கணித்து, லாபத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு டெண்டர் வழங்கப்படலாம். ஒரு பெரிய ஊழல் நடந்ததாக சி.வி.சி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது கவலைக்குரிய விஷயம், இந்த அறிக்கை 2.5 ஆண்டுகளுக்கு முன்பு விஜிலென்ஸ் செயலருக்கு அனுப்பப்பட்டது. 

கவுரவ் பாட்டியா

பொதுப்பணித்துறையின் அறிக்கையில் காட்டப்பட்டுள்ள செலவு அதிகரிப்பு காரணமாக 6,133 வகுப்பறைகள் கட்டப்பட வேண்டிய நிலையில், 4,027 வகுப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. ஒரு மதிப்பீட்டின்படி, ரூ.326 கோடி செலவு அதிகரிப்பு நடந்தது, இது டெண்டர் தொகையில் 53 சதவீதத்துக்கும் அதிகமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.