மோடியை கொல்ல தயாராகுங்கள் - மாஜி அமைச்சரின் சர்ச்சை வீடியோ

 
மொ

பிரதமர் மோடியை கொல்ல தயாராகுங்கள் என்று பேசிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார் முன்னாள் அமைச்சர்.  இது குறித்த வீடியோ வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், மாநில முதல்வர் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில்,   தான் அப்படி பேசவில்லை யாரையும் கொல்ல வேண்டும் என்று சொல்ல மாட்டேன்.  மோடியை வீழ்த்துங்கள் என்று தான் பேசினேன் என விளக்கம் அளித்திருக்கிறார்.

 மத்திய பிரதேச மாநிலத்தில் திக் விஜய் சிங் முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்தவர் ராஜா பட்டேரியா.  தற்சமயம் இவர் மாநில காங்கிரஸ் துணைத் தலைவராக இருக்கிறார். 

ம்

 இந்த நிலையில் பன்னா மாவட்டத்தில் பவாய் நகரத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியுள்ளார்.   அப்போது,  தேர்தல்களுக்கு மோடி முடிவு கட்டி விடுவார்.   மதம்,  சாதி, மொழியின் பெயரால் மோடி பிளவு படுத்துகிறார்.  தலித்துகள், சிறுபான்மையினர், பழங்குடியினரின் எதிர்காலம் ஆபத்தில் இருக்கிறது. அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் மோடியை கொல்வதற்கு தயாராகுங்கள்.  அவரை வீழ்த்துவதாக கருதி கொல்லுங்கள் என்று பேசி இருக்கிறார்.

 இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  நாட்டின் பிரதமரை ஒரு மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் கொல்ல வேண்டும் என்று  அழைப்பு விடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்த வீடியோ வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ராஜா பட்டேரியா மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருக்கிறார் .  இதை அடுத்து மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா,  பிரதமர் மோடிக்கு எதிரான பட்டேரியாவின் பேச்சு கடும் ஆட்சேபத்திற்கு உரியது.   அதனால் அவர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்ரண்டுக்கு உத்தரவிட்டிருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார் .  அதன் பின்னர் ராஜா பட்டேரியா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள் .

உடனே, ராஜா பட்டேரியா,   நான் மகாத்மா காந்தியை பின்பற்று வருபவன். நான் யாரையும் கொல்ல வேண்டும் என்று சொல்ல மாட்டேன்.  அரசியல் சாசனத்தையும் தலித்துகளையும்,  சிறுபான்மையினரையும், பழங்குடியினரையும் பாதுகாக்க வேண்டும் என்றால் மோடியை வீழ்த்துங்கள் என்று தான் பேசினேன் என்று கூறியிருக்கிறார்.