தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிக்கு ஆளுநர் பதவி - தலைமை முடிவு

 
k

தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிக்கு ஆளுநர் பதவி வழங்க  பாஜக தலைமை முடிவு செய்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

 தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். அதை அடுத்து புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராகவும் அவர் கூடுதல் நியமனம் செய்யப்பட்டார்.

p

 இதற்கு முன்பாக தமிழக பாஜகவின் தலைவராக இருந்த இல. கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.  இதை அடுத்து தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகி ஒருவரின் கடந்த கால கட்சி பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கின்ற வகையில் அவருக்கு ஆளுநர் பதவி வழங்க பாஜக தேசிய தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளன. 

 தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள்  பொன் ராதாகிருஷ்ணன்,  எச். ராஜா ஆகியோரின் பெயர்கள் இதில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

h

 எச். ராஜாவுக்கு ஆளுநர் பதவி வழங்க இருப்பதாக அண்மைக்காலமாக தகவல்கள் பரவி வந்தன.   பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வரவிருக்கும் நிலையில் இந்த பரபரப்பு தகவல்கள் பரவி இருக்கின்றன.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கி இருந்த பாஜக தலைமை. இந்த நிலையில் அவரது பெயரும்  ஆளுநர் பட்டியலில்  முக்கிய இடத்தில் உள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சர் ஆக உள்ளார். தொடர்ந்து தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு உயர் பதவிகள் கிடைத்து வருவது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.