தேர்தல் ஆணையத்தை மறைமுகமாக கிண்டலடித்த காங்கிரஸ் .. கை கட்சிக்கு தோல்வி பயம்.. பா.ஜ.க. பதிலடி

 
காங்கிரஸ்

காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தை மறைமுகமாக கிண்டலடித்ததை குறிப்பிட்டு, தோற்று விடுவோமோ என்று பயத்தில் காங்கிரஸ் இது போன்ற அறிக்கைகளை வெளியிடுகிறது என பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மொத்தம் 2 கட்டங்களாக (டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதி) நடைபெறும் என் தேர்தல் ஆணையம் நேற்று மதியம் அறிவித்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்திய தேர்தல் ஆணையம்

முன்னதாக, குஜராத் தேர்தல் தேதியை மதியம் 12 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் காங்கிரஸ் கட்சி டிவிட்டரில் ஒரு டிவிட் பதிவு செய்தது. அது தேர்தல் ஆணையத்தை மறைமுகமாக கிணடல் செய்வது போல் இருந்தது. காங்கிரஸ் அந்த டிவிட்டில், தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பு, அது நியாயமான தேர்தலை நடத்துகிறது என பதிவு செய்து இருந்தது.

பா.ஜ.க.

காங்கிரஸின் டிவிட்டுக்கு குஜராத் பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. பா.ஜ.க. டிவிட்டரில்,  காங்கிரஸின் டிவிட் பதிவை ஷேர் செய்து, தோல்வி பயம் என்று பதிவு செய்துள்ளது. தோற்று விடுவோமோ என்ற பயத்தில் காங்கிரஸ் கட்சி  இது போன்ற அறிக்கைகளை வெளியிடுகிறது என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.  குஜராத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்வதால், தேர்தல் அட்டவணை தாமதமாகி வருவதாக கடந்த 1ம் தேதியன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.