குஜராத் தேர்தல்: பிரச்சாரம் இன்று ஓய்கிறது

 
gu

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான  பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது.  முதல் கட்டமாக 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.  அந்த தொகுதிகளில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது.  

 குஜராத் சட்டமன்ற தேர்தல் நாடு முழுவதும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.   182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1ஆம் தேதி ஐந்தாம் தேதி என்று இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.   முதற்கட்டமாக 81 தொகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.  இதை முன்னிட்டு அந்த 89 தகுதிகளிலும் உச்சகட்ட பிரச்சாரம் நடந்து வருகிறது.   நாளை பிரச்சாரம் ஓய்கிறது .  இதனால் அந்த 89 தொகுதிகளிலும் உச்சகட்ட பிரச்சாரம் நடந்து வருகிறது.

gu

 பிரதமர் மோடி உள்பட  தலைவர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்கு வேட்டையாடி வருகிறார் . ஆம் ஆத்மி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் முற்றுகையிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

பாஜகவுக்கும் காங்கிரஸ்க்கும் இடையே தான் வழக்கமாக நேரடி போட்டி இருக்கும்.  இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களம் இறக்கி இருக்கிறது.  ஆட்சியினைப் பிடிக்கும் கனவில் ஆம் ஆத்மி தீவிரமாக செயல்பட்டு வருவதால் குஜராத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.   மொத்தம் இந்த தேர்தல் 1621 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.  இந்தத் தேர்தலின் போட்டியிடும் 1621 வேட்பாளர்களில் 139 பேர் பெண்கள்.  அதில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.