அன்றே சொன்னார்.. ஆட்டநாயகன் எடப்பாடியார்
தமிழ்நாடு என்பதை இனி மேல் தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன . இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பகிர்ந்த டுவிட்டர் ஒன்றை, அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அன்று தமிழ்நாடு என ஓங்கி ஒலித்தவர் ஆட்டநாயகன் எடப்பாடி யார் என்று கொண்டாடி வருகின்றனர்.
காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை கௌரவிக்கின்ற வகையில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை, தன்னார்வலர்களை பாராட்டி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி.
அப்போது பேசியவர், ஒரே பாரதம் தான். அதில் நாம் எல்லோரும் அங்கம். இப்போது பாரதத்தை பற்றி பலரும் பேசுவது கிடையாது. பாரதம் என்பதை உடைப்பதற்கு அழிப்பதற்கு பல முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆங்கிலேயர்கள் அதை அழிக்க நினைத்தார்கள்.
தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால் அதை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும் . ஆங்கிலேயர் காலத்தில் தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன . பாரதத்தின் பகுதி தமிழகம். பாரதத்தின் அடையாளம் தமிழகம் . உலக நாடுகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா தான் தலைமையாக இருக்கப் போகிறது என்று பேசியிருக்கிறார்.
அன்றே #தமிழ்நாடு என ஓங்கி ஒலித்தவர் ஆட்டநாயகன் #எடப்பாடியார் 🔥💥#AIADMK #ADMK #அதிமுக #அஇஅதிமுக pic.twitter.com/bpd2TxMrxu
— எடப்பாடியார் Army (@EPSFOR2026) January 6, 2023
தமிழ்நாடு என்கிற சொல்லை தவிர்த்து தமிழகம் என்கிற சொல்லை பயன்படுத்த வேண்டும் என ஆளுநர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளுநரின் இந்த பேச்சுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. #தமிழ்நாடு என்கிற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.
இந்த நிலையில், அண்மையில் அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போட்ட டுவிட்டர் பதிவினை அதிமுகவினர் தற்போது ட்ரெண்டாக்கி வருகின்றார்கள்.
ட்விட்டர் பக்கத்தில் ஒரு வார்த்தை ட்ரெண்டிங்கின்போது, முதல்வர் ஸ்டாலின் ’திராவிடம்’ என்றும், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ’மக்கள்’ என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘சனநாயகம்’ என்றும் , தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘தமிழன் ’என்றும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘தமிழ் தேசியம்’ என்றும் குறிப்பிட்டிருந்தனர் .
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் ஒவ்வொரு வார்த்தை பதிவிட்டு இருந்தனர் . இதில் எடப்பாடி பழனிச்சாமியோ ‘தமிழ்நாடு’ என்று பதிவிட்டிருந்தார். இதனை அதிமுகவினர் . அன்றே தமிழ்நாடு என்று ஓங்கி ஒலித்தவர் ஆட்டநாயகன் எடப்பாடியார் என்று அந்த பதிவினை டிரெண்டாக்கி வருகின்றனர்.