‘’கள்ளக் காதலிக்கு கட்சியைத் தாரை வார்த்தவன்...’’

 
j

 யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்று சொல்வது மாதிரி,  சுப்புலட்சுமி திமுகவில்  இருந்து நீங்குவதற்கு முன்பாகவே சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன், திமுகவை கடுமையாக வறுத்தெடுத்து வந்தார்.  இது திமுகவினரிடையே  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  கட்சியில் இருந்தும் விலகியுள்ளார். 

su

ராஜினாமாவுக்கு முன்னதாகவே விருதுநகரில் திமுக முப்பெரும் விழாவில், சுப்புலட்சுமியும், அவரது கணவரும் பங்கேற்கவில்லை.  அதற்கு முன்னதாகவே ஜெகதீசன் திமுகவில் பல வெடிகளை கொளுத்தி போட்டுக்கொண்டே இருந்தார்.

மாமனிதன் வைகோ என்கிற ஆவணப்படத்தை கடந்த 11ஆம் தேதி அன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வெளியீட்டு அதில் வைகோவை புகழ்ந்து பேசினார்.  இதை பார்த்த ஜெகதீசன் கடுப்பாகிவிட்டார்.   உடனே அவர் தனது முகநூல் பக்கத்தில்,    வெட்கமில்லை மானமில்லை நடத்துராஜா.. நேரம் எப்படி மாறி இருக்குது பாரு ராஜா.. துரோகத்தை எதிர்த்து அன்று கருணாநிதிக்கு ஆதரவாக நின்றவர்கள் நிலை என்ன ராஜா.. வெட்கம் மானம் ரோஷம் மரியாதை சூடு சொரணை எனக்குள்ளது என்ன செய்ய உடன்பிறப்பே.. என்று கூறியிருக்கிறார்.    இதற்கு அடுத்த பதிவில் 2016ல் நால்வர் அணிக்கு தலைமை ஏற்ற வைகோ பேசிய, ஏசிய உரைகள் ஞாபகம் வரவில்லையா?  அதை உணராமல் விமர்சிக்கும் என்னை திட்ட வெட்கமாக இல்லையா உமக்கு என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளில் இன்னும் காரசாரமாகவே திமுகவை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

va

1993  பழநி நாடாளுமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு இராணிப் பேட்டை சட்டமன்ற இடைத்தேர்தலுக்குச் சென்ற தமிழினத்தலைவர் கலைஞர் அவர்களின் வேனை தீயிட்டுக்கொளுத்தினர் .  வண்டியிலிருந்த தலைவரின் உடை உள்ளிட்ட உடமைகள் தீக்கிறையாயின . தீயிடத் திட்டம் வகுத்துத்தந்தவன் ஜெ. அரசில் அன்று மந்திரி . தீயிட்டவன் எம்.எல்.ஏ .  இன்று அவன்கள் இருவரும் திமுக அரசின் மந்திரிகள் . முதல்வருக்கு கூட இருந்து குழி தோண்டும் குணாளன்கள் !!
பூரித்துப் பாராட்டுபவர் இன்றைய முதல் மந்திரி . காலங்கள் மாறலாம் . அவர்கள் உடன்பிறந்த துரோகச்சிந்தனைகளும், இந்தத் துரோகிகளும் மாறமாட்டார்கள் என்பது முதல்வருக்குத் தெரியாதா ? அவர்களால் கட்சிக்கு ஆதாயமா ? இல்லை அவர்களுக்கா ? குடும்பத்துக்கா ? என்று கேட்கிறார்.

கலைஞரின் குரல் ! கேட்கிறதா? என்ற தலைப்பில் துரோகிகளைப் பார்த்து துடிக்கிறது தம்பி என் நெஞ்சு !  உழைத்து ஓடாய்போன தொண்டர்களைக் கண்டு கண்ணீர் பெருகுகிறதே என் உடன்பிறப்பே ! என்னைக்காட்டிக் கொடுத்து அழிக்க நினைத்தவர்கள் ஆட்சியின் அதிகாரத்தில் ! என்னைக் கவசம்போல் காத்து நின்று சிறை ஏகி வளமிழந்தோர் வறுமையின் பிடியில் ! நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலையற்ற என் "மக்களைக்" காணும்போது !! என்று பதிவிட்டிருந்தார்.

s

யார் காரணம் ? கள்ளக் காதலிக்கு கட்சியைத் தாரை வார்த்தவன் ,  பிஜேபியிடம் கையூட்டு வாங்கிய நிர்வாகிகள் , தலைவர் கூட்டத்தை தொகுதியில் நடத்த விடாமல் செய்தவர்கள், அன்றைய முதல்வர் பழனிசாமி தாயை இழிவாய்ப் பேசி தாய்மார்கள் எதிர்ப்பை வலியத் தேடித்தந்தவர்கள் , 15600 பேருக்குத் தொகுதியில் செய்யப்பட்ட 188.30 கோடி கடன் தள்ளுபடி வாக்கு எண்ணிக்கையின் போது பிஜேபி ஏஜண்டுகளுக்கு ஆதரவாய் , மாவட்டச் செயலாளரின் சொற்படி செயல்பட்ட துரோகிகள் 
இவைகள் காரணங்களில் சில ! கொங்கின் மற்ற கிராமப்புற தொகுதிகளில் திமுக தோற்றது பல்லாயிரம் வாக்குகளில் !!இங்கு 280 தான் ! அது எம் கடுமையான உழைப்பின் காரணம் ; புரிந்து கொள்க . வாய் புளிக்கவில்லை ; மாங்காய்தான் புளிப்பு என்பதை உணருங்கள் .வெந்த பண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம் .கட்சிப்பணிக்கு 45 ஆண்டு காலம் உழைத்தும் ஓய்ந்து விடவில்லை ! என்றும் பதிவிட்டிருந்தார்.

நான் சங்கு ஊத விரும்பாதவன் ! ஜால்ரா அடிக்கத்தெரியாதவன் .சேவண்டி முழக்க அறியாதவன் .மொத்தத்தில் பிழைக்கத்தெரியாதவன் . செய் நன்றி மறவாதவன் என்றும் சொல்லி இருந்தார் .

ja

திமுக துணைப்பொதுச்செயலாளரின் கணவர்  இப்படி வெளிப்படையாக விமர்சித்து இருப்பதால் திமுகவினரிடையே அதிர்ச்சி ஏற்பட்டு இருந்தாலும்,  கட்சியினர் பலரும் அவரின் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

துணைப் பொதுச்செயலாளரின் கணவர் பதிவு செய்ததில் நளினம் இல்லாமல் இருக்கலாம்,மென்மை தன்மை இல்லாமல் இருக்கலாம். தலைமையில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் கணவருக்கு சில பொறுப்புகள் இருக்கிறது அதை மீறக் கூடாது என்ற விதி இருக்கலாம்.  ஆனால் அவர் சொல்லிய கருத்தில் உண்மை இல்லாமல் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.