ராசாவை பெற்றதற்கு அவரின் தாய் வருத்தப்பட வேண்டும்;எங்களுடைய பெயர்களுக்கு கலங்கம் விளைக்கிறார் - செல்லூர் ராஜூ

 
செ

 எங்களுடைய பெயர்களுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுகின்றார் ஆ .ராசா.  அவரைப் பெற்றதற்காக அவரின் தாய் வருத்தப்பட வேண்டும் . இவ்வளவு பிரச்சனைகள் நடந்தும் திமுக தலைவர்  அமைதியாக உள்ளார்.  2ஜி ஊழலில் பெரும் பகுதியை ஆ. ராசா கொடுத்திருப்பார் போல.. அதனால் அவர்கள் அவரை கண்டிக்க பயப்படுகின்றார்கள் என்று கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

செ

 முன்னாள் அமைச்சரும் மதுரை மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜு தொகுதிக்கு உட்பட்ட பைகாரா பகுதியில் உள்ள பூமி பூஜை நிகழ்வில் கலந்து கொண்டார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம்  பேசியபோது ,  ஆ.  ராசா பேச்சினால் எழுந்திருக்கும் அதிர்வலைகள் குறித்த கேள்விக்கு,   ராஜா என்கிற பெயர் பிரச்சனையான பெயர் கிடையாது.  என்னுடைய பெயர் கூட ராஜா தான்.   ஆனால் எங்களுடைய பெயர்களுக்கு எல்லாம் கலங்கம் விளைவிக்கின்ற வகையில் செயல்படுகின்றார் ஆ. ராசா என்றார். 

 தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு,    இது போன்ற பிள்ளையை பெற்றதற்காக அவரின் தாய் வருத்தப்பட வேண்டும்.   இவ்வளவு பிரச்சினைகள் நடந்தும் திமுக தலைவர் பாராமுகமாக இருக்கிறார்.   ஆ .ராசா எப்போதும் வருத்தம் தரும் வார்த்தைகளை உதித்து வருகின்றார்.  முன்னாள் முதல்வர் எடப்பாடியார் பிறப்பு குறித்து தவறாக பேசினார்.   இப்போது இப்படி பேசி இருக்கிறார்.

ர

 ஆ. ராசாவுக்கு திமுக தலைவர் வாய்ப்பூட்டு போட வேண்டும்.   அப்போதுதான் திமுகவிற்கு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் மதிப்பாவது மிஞ்சும் என்றார்.

 வீட்டு வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற விலைவாசி உயர்வுகளை மறைப்பதற்காகவே ஆ. ராசா இப்படி பேச வைக்கப்படுகிறார்.  அப்படித்தான் சந்தேகம் இருக்கிறது.   அதனால் தான் முதல்வர் ஆ.  ராசா விஷயத்தில் வாய் மூடி அமைதியாக இருக்கிறார்.   இதே அதிமுகவினர் இப்படி பேசியிருந்தால் கட்சி கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்கும். 

 திமுக தலைவர் அமைதியாக இருக்கிறார் என்றால் 2g அலைக்கற்றை ஊழலில் பெரும் பகுதியை ஆ .ராசா அவருக்கு கொடுத்திருப்பார் போல.. அதனால்தான் கண்டிக்க பயப்படுகின்றார்கள் என்று நினைக்கிறேன் என்றார் செல்லூர் ராஜு.