உப்பு போடாமல்தான் சாப்பிடுகிறேன் - அண்ணாமலைக்கு அமைச்சர் நேரு பதில்

 
kn

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதும் திமுகவின் வாரிசு அரசியல் குறித்து கடும் விமர்சனம் எழுந்திருக்கிறது.  இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியும் அரசியலுக்கு வர வேண்டும்.  அவரும் முதல்வராக வேண்டும் என்றும் திமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 இதுகுறித்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேருவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,  உதயநிதி ஸ்டாலின் என்ன அவரது மகன் வந்தால் கூட வரவேற்போம் வாழ்த்துவோம் என்று தெரிவித்திருந்தார்.  இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வயதில் குறைந்த உதயநிதிக்கு வாழ்க கோஷம் போடுகிறாரே  அமைச்சர் நேருவுக்கு சூடு சொரணை இல்லையா என்று கேட்டிருந்தார்.  இதற்கு அமைச்சர் நேரு பதில் அளித்திருக்கிறார்.  மேலும் தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என்று அண்ணாமலை சொல்லி வருவதற்கும் பதில் அளித்திருக்கிறார் .

ann

சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசு பட்டு வளர்ச்சித் துறை சார்பில் பட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற பின்னர் அமைச்சர் நேருவிம், ட திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை கூறி இருக்கிறாரே என்று கேள்விக்கு,  அவர் மத்திய அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவார் என்று பதிலளித்திருக்கிறார்.

 வயதில் குறைந்த உதயநிதிக்கு அமைச்சர் நேரு வாழ்க கோஷம் போடுகிறாரே சூடு சொரணை இல்லையா என்று அண்ணாமலை கேட்டிருப்பது குறித்த கேள்விக்கு, ஆமாம், எனக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லை. அதனால் உப்பு போடாமல் சாப்பிடுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.