‘’அந்த அம்மா இருந்திருந்தால் அங்கேயே எடப்பாடியை சுட்டு கொன்றிருப்பார்..’’

 
e

 தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நான் பொதுக்கூட்டம் நடந்தது.   இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதா ஜீவன் பங்கேற்றார்.   விழாவில் அவர் பேசிய போது,   நாம் அனைவரும் தமிழனாக ஒன்றிணைய வேண்டும் என்கிற வகையில் பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் பாடுபட்டார்கள்.   இதன் காரணமாகத்தான் தமிழ்நாடு இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக இருந்து வருகிறது .  தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் தமிழன் வளர வேண்டும் என்கிற வகையிலும் தலைவர்களின் வழியில் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார் என்றார்.

j

 தொடர்ந்து பேசிய  கீதா ஜீவன்,   கலைஞரின் வழியில் இனமான உணர்வுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.  இதற்கு முன்னதாக அதிமுக கட்சியினர் அடிமை ஆட்சி நடத்தி வந்தார்கள். 

 சசிகலா அம்மா போட்ட பிச்சையில் எடப்பாடி முதலமைச்சர் ஆனார்.  இது அனைவருக்கும் தெரியும்.  ஆனால் அந்த அம்மாவுக்கு எப்படி மரியாதை கொடுத்தார்கள் என்பதும்  தெரியும். 

 ஒன்றிய அரசு சொல்வதற்கு எல்லாம் தலையாட்டினார்.   உங்கள் குடுமி ஒன்றிய அரசின் மோடி கையில் இருந்தது.   அதனால்தான் சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு என்ற தீர்மானம் கொண்ட வரும்போது எடப்பாடி பழனிச்சாமி வெளியே ஓடிவிட்டார்.  எதற்காக ஓடினார்.   நின்று இருக்க வேண்டியது தானே.   இதைத்தான் புரட்சித் தலைவர் சொல்லிக் கொடுத்தாரா? இதைத்தான் ஜெயலலிதா அம்மா சொல்லிக் கொடுத்தாரா? அந்த அம்மா மட்டும் இருந்திருந்தால் அங்கேயே எடப்பாடி பழனிச்சாமியை சுட்டுக் கொன்று இருப்பார் என்றார் ஆவேசத்துடன்.

es

 அண்ணாவின் பெயரை தாங்கி இருக்கும் அதிமுக  அண்ணா வைத்த பெயரை மாற்றுவதற்கு ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை .  அப்படி இருக்கும் போது திமுகவைப் பற்றி பேசும் தகுதி உங்களுக்கு இல்லை என்றார்.