கேரளாவின் ஆளுநர் ஆகிறாரா தமிழிசை? தெலுங்கானாவில் இருந்து மாற்றப்படும் காரணம் இதுதான்!

 
t

 தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகவும்,  புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் ஆகவும் இருந்து வருகிறார் தமிழிசை சவுந்தர ராஜன்.   இவர் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. 

 தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர ராஜன்,   கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகரராவுக்கும் தமிழிசை சவுந்தர ராஜனுக்கும் அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி வருகின்றது .  இதனால் ஆண்டின் முதல் சட்டப்பேரவை தொடரில் பேச ஆளுநர் தமிழிசையை மாநில அரசு அழைக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதற்காக தமிழிசை சவுந்தரராஜன் அதிருப்தியை  தெரிவித்திருந்தார்.

mo

 இந்த நிலையில் பிரதமர் மோடி,  உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார் தமிழிசை சௌந்தர ராஜன்.  அப்போது ஆளுநர் அலுவலகத்திற்கான மரபுகளை தெலுங்கானா அரசு மீறி வருகிறது என்றும்,  மாநிலத்தில் ஊழல் அதிகரித்திருப்பதாகவும் புகார் வாசித்ததாக தெரிகிறது. 

 இதை அடுத்து தமிழிசை சௌந்தர ராஜனை கேரளா அல்லது பாஜக ஆளும் ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநராக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பேச்சு எழுந்திருக்கிறது.   கேரளாவின் ஆளுநராக இருக்கும் ஆரிப் முகமதுகானை தெலுங்கானா மாநிலத்திற்கு மாற்ற பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவுகின்றன.

தெலுங்கானாவில் இருந்து மாற்றப்பட்டாலும்,  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக தமிழிசை சௌந்தர ராஜன் தொடர்வார் என்றும் தகவல் பரவுகிறது.