கங்கனா ரனாவத் கட்சியில் இணைவதை வரவேற்கிறோம்.. ஆனால் சீட் வழங்குவது ஆலோசனை செயல்முறைக்கு பிறகு முடிவு... ஜே.பி. நட்டா

 
பா.ஜ.க. அல்லது என் கட்சியில் சேர கங்கனா ரனாவத் முடிவெடுத்தால் அதை நான் வரவேற்பேன்.. ராம்தாஸ் அதவாலே

கங்கனா ரனாவத் கட்சியில் இணைவதை வரவேற்கிறோம், ஆனால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது எனது தனிப்பட்ட முடிவு அல்ல, ஆலோசனை செயல்முறைக்கு பிறகு  முடிவு எடுக்கப்படும் என்று ஜே.பி. நட்டா தெரிவித்தார்.


பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க. சார்பில் 20224 மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருப்பதாக மறைமுகமாக தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியதாவது: கங்கனா ரனாவத் கட்சியில் இணைவது வரவேற்கத்தக்கது. கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்பும் அனைவருக்கும் போதுமான இடம் உள்ளது.

ஜே.பி. நட்டா

ஆனால் தேர்தலில் போட்டியிடுவதைப் பொறுத்தவரை, எனது தனி முடிவு அல்ல. அடிமட்ட மட்டத்தில் இருந்து தேர்தல் குழு, நாடாளுமன்ற வாரியம் வரை ஆலோசனை செயல்முறை உள்ளது. பா.ஜ.க.வில் சேர அனைவரையும் வரவேற்கிறோம். ஆனால் எந்த திறனில் என்பதை கட்சி தீர்மானிக்கிறது. நிபந்தனைகளின் அடிப்படையில் நாங்கள் யாரையும் அழைப்பதில்லை. நாங்கள் அனைவருக்கும் சொல்கிறோம், நீங்கள் நிபந்தனையின்றி வர வேண்டும், அதன் பிறகுதான் கட்சி முடிவு செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

பா.ஜ.க.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அதிரடியான கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர். மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக பேசி விடுவார். கங்கனா ரனாவத் அடிக்கடி மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதனால் கங்கனா ரனாவத் அரசியல் குதித்க போகிறார் என்ற தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்,  பொதுமக்கள் விரும்பினால், பா.ஜ.க. எனக்கு சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிட தயார், 2024 மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட தயாராக உள்ளேன் என்று கங்கனா ரனாவத் தெரிவித்தார்.