"அன்றே சொன்னார் அண்ணா.. 'ஆளுநர் வேண்டாம்' இயக்கத்தை முன்னெடுங்க" - முதல்வருக்கு வந்த முக்கிய கோரிக்கை!

 
ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவை ஏகமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி ஆளுநர் சட்டப்பேரவைக்கே திருப்பியனுப்பினார். இதையடுத்து நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாவை மீண்டும் தாக்கல் செய்வதற்கு சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்படுவது இதுவே முதன்முறை. 

இந்தியா பயணிக்க வேண்டிய பாதையை அன்றே டெல்லிக்கு சுட்டிக்காட்டியவர் பேரறிஞர்  அண்ணா”- மு.க. ஸ்டாலின் | nakkheeran

அந்த வகையில் ஆளுநர் திருப்பியனுப்பியது குறித்து பேசிய மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், "ஆளுநரின் கடிதத்தை படித்து மிகுந்த வேதனையில் உள்ளேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை மத்திய அரசால் அனுப்பப்பட்ட ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இதனை உணர்ந்துதான் அன்றே அண்ணா, ’ஆட்டுக்குத் தாடி தேவையில்லை. மாநிலங்களுக்கு ஆளுநர் தேவையில்லை’ என்று கூறினார்.

jawahirullah

சமூக நீதியைக் காக்க சமூக நீதிக் கூட்டமைப்பை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். அதை வரவேற்கிறோம். அதேபோல், மாநிலங்களுக்கு ஆளுநர் தேவையில்லை என்ற இயக்கத்தை முதல்வர் முன்னெடுக்க வேண்டும். அது மாநிலங்களின் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை காமாலைப் பார்வையின் அறிக்கை என்று ஆளுநர் கூறியிருப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயல். ஆளுநர் தனது கடிதத்தில் தனது தனிப்பட்ட கருத்துகளைத் திணித்திருக்கிறார்" என்றார்.