கைது... எடப்பாடி பழனிச்சாமிக்கு கே.என்.நேரு எச்சரிக்கை
உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது குறித்து எதிர்த்தரப்பினர் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கருணாநிதி, ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் வந்துவிட்டார். அடுத்து அவர் மகன் தான் வருவார். இது வாரிசு அரசியல் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ந் அதுவும் திமுகவின் மூத்த தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உதயநிதி ஸ்டாலின் பெயர் இடம் பெற்றுள்ளது. இது திமுகவில் சீனர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்று விமர்சனம் இருந்து வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் என்ன அவரது மகன் வந்தாலும் ஆதரிப்போம் என்று தெரிவித்திருக்கிறார் திமுகவின் மூத்த தலைவரும் அமைச்சருமான கே. என். நேரு.
பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்ம்ட சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது .
தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு இக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியபோது, திமுகவில் வாரிசு அரசியல் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி விமர்சனம் செய்கிறார். இது வாரிசு அரசியல் அல்ல கருணாநிதியின் குடும்பத்திற்கு திமுகவினர் எப்போதும் நன்றி விசுவாசமாக இருப்போம். அந்த அடிப்படையில் உதயநிதிக்கு பதவி வழங்கப்பட்டிருக்கிறது . உதயநிதி மட்டுமல்ல அவர் மகன் வந்தாலும் ஆதரிப்போம் . நன்றியோடு இருப்பவர்கள் திமுகவினர் என்றார்.
தொடர்ந்து பேசிய கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தேனாறும் பாலாறும் ஓடுமா என்று கேட்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவர் ஆட்சிக் காலத்தில் தேனாறும் பாலாறும் ஓடியதா என்ன? என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார் நேரு.
அதிமுக ஆட்சியில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக சொல்கிறார் பழனிச்சாமி. தமிழக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை எந்தவித கைது நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை எடப்பாடி பழனிச்சாமி புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றார்.