பா.ஜ.க. மதவெறியர்களின் வெறுப்பு பேச்சுகளுக்காக ஒரு நாடாக இந்தியா ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?.. கே.டி. ராம ராவ்
மோடி ஜி, பா.ஜ.க. மதவெறியர்களின் வெறுப்பு பேச்சுகளுக்காக ஒரு நாடாக இந்தியா ஏன் சர்வதேச சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்? என தெலங்கானா அமைச்சர் கே.டி. ராம ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக அண்மையில் செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் விவாதத்தில் பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசுகையில், நபிகள் நாயகத்துக்கு எதிராக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, முகமது நபி மற்றும் இஸ்லாம் மதத்துக்கு எதிரான தவறான மற்றும் புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியதாகவும் நுபுர் சர்மாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டது. இதன் எதிரொலியாக நுபுர் சர்மாவை பா.ஜ.க.வை இடைநீக்கம் செய்தது. மேலும், டெல்லி பா.ஜ.க.வின் ஊடக பொறுப்பாளர் நவீன் குமார் ஜிண்டாலையும் பா.ஜ.க. இடைநீக்கம் செய்துள்ளது.
இந்நிலையில், நபிகள் நாயகத்துக்கு எதிராக பா.ஜ.க. தலைவர்களின் கருத்துக்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், தெலங்கானா அமைச்சர் கே.டி.ராம ராவ், பா.ஜ.க. மதவெறியர்களின் வெறுப்பு பேச்சுகளுக்கு ஒரு நாடாக இந்தியா ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். கே.டி. ராம ராவ் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி ஜி, பா.ஜ.க. மதவெறியர்களின் வெறுப்பு பேச்சுகளுக்காக ஒரு நாடாக இந்தியா ஏன் சர்வதேச சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்?. பா.ஜ.க.தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஒரு தேசமாக இந்தியா இந்தியா அல்ல. நாளுக்கு நாள் வெறுப்பை கக்கி, பரப்பியதற்காக உங்கள் கட்சியினர் நாட்டில் உள்ள இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மோடி ஜி, பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் மகாத்மா காந்தியின் படுகொலையை பாராட்டியபோது உங்கள் மௌனம் காது கேளாததாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் இருந்தது. ஞாபகப்படுத்துகிறேன் ஐயா, நீங்கள் எதை அனுமதிக்கிறீர்களோ அதையே நீங்கள் விளம்பரப்படுத்துகிறீர்கள். மேலிடத்தின் மறைமுகமான ஆதரவுதான் மதவெறி மற்றும் வெறுப்பை ஊக்கப்படுத்தியது. இது ஈடுசெய்ய முடியாத இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்துகிறது என பதிவு செய்து இருந்தார்.