"வேட்பாளர்களிடம் ரிப்போர்ட் கார்டு கேளுங்க" - மக்களுக்கு ஐடியா கொடுத்த கமல்!

 
கமல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் றுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. ஆம் இன்றோடு பிரச்சாரம் ஓயவிருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அதி தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இம்முறை திமுக மட்டுமே கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்கிறது.பாஜகவும் அதிமுகவும் தனித்து களம் காண்கின்றன. பாமக, நாம் தமிழர் கட்சி, அமமுக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளும் விஜய மக்கள் இயக்கமும் தனியாக தேர்தலைச் சந்திக்கின்றன. இதனால் களத்தில் அனல் பறக்கிறது. பாஜக, அதிமுக திமுவைகையும் திமுக அந்த இரு கட்சிகளையும் விமர்சித்து வாக்கு சேகரிக்கின்றன.

விழுப்புரத்தில் தேர்தல் பிரச்சாரம் : கமல் பேச்சு - YouTube

மேலும் திமுக ஆட்சிக்கு வந்த 8 மாத காலத்தில் செய்த நல்லவைகளைக் கூறியும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது. மற்றவர்களோ அதிமுக, திமுக என இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சிக்கின்றனர். அவர்கள் இருவரையும் விடுங்கள். எங்களுக்கு வாக்களியுங்கள் என மக்களிடம் கேட்கின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பல்வேறு இடங்களுக்குச் சென்று தீவிரமாகப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். செல்லுமிடமெல்லாம் இரு திராவிட கட்சிகளையும் விமர்சிக்கிறார்.

அந்த வகையில் நேற்று கோவை மாநகராட்சியின் 63 வார்டில் வேட்பாளர் ரம்யா வேணுகோபாலை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், "மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர்கள் தாங்கள் வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினராக லட்சத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் ராஜினாமா செய்வதாக பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்கள். மற்ற கட்சியினர் இது போன்று பத்திரம் எழுதித் தருவார்களா? எங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் மக்களுக்கு மாதா மாதம் ரிப்போர்ட் கார்டு கொடுப்பார்கள். நாங்கள் தூய்மையான அரசியலை முன்னெடுகிறோம்.” என்றார்.