திமுக - மநீம கூட்டணி? கமல்ஹாசன் அளித்த நச் பதில்
மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு 4 வருடம் ஆன நிலையில் இதுவரை இரண்டு பொது தேர்தல்களை சந்தித்துள்ளது 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வெற்றி கிடைக்காத நிலையில் வர உள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கான வியூகங்கள் வகுப்பது குறித்து கமல்ஹாசன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
2024 ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன மக்களுக்கு மய்யம் கட்சியும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவிட்டது. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளோடு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனையில் ஈடுபட்டார். 85 மாவட்ட செயலாளர்கள்,மாநில நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை கமல்ஹாசன் வழங்கினார்.
கமல்ஹாசன் தலைமையிலான மநீம கட்சி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்கிறதா என அரசியல் பார்வையாளர்களிடையே கேள்வி எழுந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன், “கடந்த முறை செய்த தவறுகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் செய்யக்கூடாது. நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்து விவாதித்தோம். இதைப் பற்றி இப்போது மேலும் விவரிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.