குஷ்பு -அமித்ஷாவை தரக்குறைவாக விமர்சித்த திமுக நிர்வாகி -வைரலாகும் வீடியோ
அவ ,இவ என்று பாஜகவில் இருக்கும் நடிகைகளை ஒருமையில் பேசி இருக்கிறார் திமுக நிர்வாகி . அதுவும் அமைச்சரின் முன்னிலையில் மேடையில் இப்படி ஒருவர் பேசுவதை அந்த அமைச்சரும் ரசித்துக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
குஷ்புவையும் அமிச்ஷாவையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசி உள்ளது குறித்து கடும் கண்டனங்கள் வளர்த்து வருகின்றன.
திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி பாராட்டும் பொதுக்குழு விளக்க கூட்டம் சென்னை ஆர். கே. நகரில் நடந்துள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் இந்த கூட்டம் நடந்துள்ளது .
விழாவில் பேசிய சைதை சாதிக் என்பவர், பாஜக மகளிர் நிர்வாகிகள் குறித்தும், பாஜகவில் இருக்கும் குஷ்பூ, நமீதா, கௌதமி உள்ளிட்ட நடிகைகளை அவ, இவ என்றும், ஒருத்தி இருக்காளே அவ பேரு என்ன என்று ஒருமையில் பேசுகிறார். இதை மேடையில் இருப்பவர்கள் அனைவரும் ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த வீடியோ வைரலாகி திமுக நிர்வாகியின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக பொதுக்கூட்டத்தில் சைதை சாதிக் பேசிய பேச்சு, இதையெல்லாம் முதல்வர் வரவேற்கிறார் போலும் என்று பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நேற்று சென்னை ஆர் கே நகரில் நடந்த தி மு க பொதுக்கூட்டத்தில் சைதை சாதிக் பேசிய பேச்சு , இதையெல்லாம் முதல்வர் வரவேற்கிறார் போலும் pic.twitter.com/M7rhFmvcRK
— kishore k swamy 🇮🇳 (@sansbarrier) October 27, 2022