தோழிக்கு உதவுகிறாரா கிருத்திகா உதயநிதி

 
க்

திருப்பூர் மேயர் பதவிக்கு போட்டிகள் பலமாக இருக்கும் நிலையில் கிருத்திகா உதயநிதியின் தோழி கணவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

 திருப்பூர் மாநகராட்சியில் உள்ள  60 வார்டுகளில் 37 வார்டுகளில்  திமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.  அதிமுக 19 வார்டுகளையும்,   பாஜக மற்றும் சுயேச்சைகள் 8 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.   மாநகராட்சியில் திமுக மேயர் பதவியை பெறுவது என்பது உறுதியாகி இருக்கிறது.

க்

 திமுகவில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மேயர்பதவியை எதிர்பார்த்து வரிசைகட்டி நிற்கிறார்கள்.   முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி மேயர் பதவியை கேட்டிருக்கிறாராம்.   இவருக்கு அமைச்சர் துரைமுருகனின் ஆதரவு இருக்கிறது என்கிறார்கள்.

 அமைச்சர் சாமிநாதன் ஆதரவாளரும் வடக்கு மாவட்ட செயலாளருமான பத்மநாபன் மேயராக வேண்டுமென்று முயற்சிகள் நடந்து வருகிறதாம் .   திருப்பூர் வடக்கு நகர செயலாளர் தினேஷ்குமார் வார்டு கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.   இவரது மனைவியும் உதயநிதியின் மனைவியும் நெருங்கிய தோழிகள் அந்த அடிப்படையில் இவருக்கு உதயநிதி தரப்பில் ஆதரவு இருக்கிறது என்கிறார்கள். 

 மத்திய மாவட்ட செயலாளரும் எம்எல்ஏமான செல்வராஜ் தனது ஆதரவாளர்கள் செந்தில்குமார் , முத்து குமார் ஆகியோரை மேயர் பதவிக்கு பரிந்துரைத்துள்ளாராம்.