எடப்பாடியை டென்ஷனாக்கும் மாஜியின் மூவ்!
அதிமுகவில் 25 மாவட்டங்களில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், மீதமுள்ள 49 மாவட்டங்களில் உட்கட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா, இரண்டு கட்டமாக நடத்துவதா என்பது குறித்து அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.
அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி ,வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார்,சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் மனோஜ் பாண்டியன் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே கார சார விவாதங்களால் கூட்டத்தின் உள்ளே சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூட்டத்திலிருந்து வெளியேறினார். அவரை சமாதானப் படுத்த பின்தொடர்ந்து சென்றார் சட்டசபை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன். ஆனால் வைத்தியலிங்கத்தின் கார் நிற்காமல் சென்றுவிட்டது. பின்னர் சமாதானமான வைத்தியலிங்கம் கூட்டத்திற்கு வந்து சேர்ந்தார்.
அந்தக் கூட்டத்தில், எடப்பாடிக்கு நெருக்கமான வேலுமணி கட்சி விவகாரங்களில் அதிகம் தலையிடுகிறார் என்று புகார் சொல்லி ஆரம்பித்ததால் எடப்பாடிக்கு நெருக்கமான சி.வி.சண்முகம் , ஒருமையில் பேசியிருக்கிறார். வைத்திலிங்கம் ஓபிஎஸ் உடன் ஜோடி சேர்ந்து கொண்டு சசிகலா ஆதரவு நிலை எடுத்து பேசுகிறார் என்று சொல்லி இருக்கிறார். இதுதான் எடப்பாடி குற்றச்சாட்டு. அதைத்தான் மோசமான வார்த்தைகளில் எதிரொலித்திருக்கிறார் சிவி சண்முகம். அதோடு வேலுமணியும் சேர்ந்து கொள்ள, டென்ஷனான வைத்தியலிங்கம் கூட்டத்திலிருந்து வெளியேறி இருக்கிறார். பின்னர் சமாதானப் படுத்தி தான் அவரை கொண்டு வந்திருக்கிறார்கள்.
வைத்திலிங்கம் தலைமையில் தென் மாவட்ட அதிமுக பிரமுகர்கள் எடப்பாடி பழனிச்சாமி எதிராக தாக்குதல் நடத்த தயாராகி வருகிறார்கள். அதிமுகவை கைப்பற்ற தீவிர முயற்சியில் இறங்கி இருக்கும் சசிகலாவுக்கு வைத்திலிங்கம் பெரிய உதவிகள் செய்து வருகிறார் என்று தகவல்.
எடப்பாடி பழனிச்சாமி தான் தனக்கு எதிராக இருப்பதால் அதிமுகவில் தனது பலத்தை அதிகரிக்க தீவிரமாக களமிறங்கி இருக்கிறார். இதற்கு வைத்திருக்கும் பக்கபலமாக நிற்கிறார் என்று தகவல். நிச்சயமாக அதிமுகவுக்கு தலைமை ஏற்பேன் . அடுத்த ஆட்சி அம்மாவின் ஆட்சி. வரும் காலத்தில் அதிமுக எனது தலைமையில் இயங்கும் என்று சசிகலா இத்தனை உறுதியாக அறிவிக்கிறாரே? அபப்டி என்றால் எந்த நம்பிக்கையில் பேசுகிறார். அரசியல் சுற்று பயணம் மேற்கொள்கிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களிடம் தீவிரமாக கலந்த ஆலோசித்து வருகிறார்.
அப்போதுதான் அவர்கள் , வைத்திலிங்கத்தின் பெயரைச் சொல்லி இருக்கிறார்கள். அவர்தான் சசிகலாவிற்கு அதிமுகவில் பலம் சேர்க்க காய் நகர்த்தி வருகிறார் என்று சொல்லி இருக்கிறார்கள். சசிகலா தஞ்சாவூர் சென்ற போது கூட வைத்தியலிங்கம் தனக்கு நெருக்கமானவரை அனுப்பி பேச சொல்லி இருக்கிறார் என்றும் எடப்பாடி தகவல் கிடைத்திருக்கிறது.
அதிமுக உட்கட்சி தேர்தலில் மூலம் தனக்கு ஆதரவான புள்ளிகளை முக்கிய பதவிகளில் அமர வைத்து நம்பிக்கையுடன் இருந்தாலும், சசிகலாவின் அந்த உறுதியான அறிவிப்பும் வைத்தியலிங்கத்தின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்? கட்சியில் யாரையெல்லாம் இழுத்துக் கொண்டு சசிகலாவுக்கு பலம் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்ற யோசனையில் படு டென்ஷனில் இருக்கிறாராம் எடப்பாடி.