காங்கிரஸின் அணுகுமுறையால் தான் இந்தியா முன்னேறியது.. மல்லிகார்ஜூன் கார்கே பேச்சு

 
மல்லிகார்ஜுன கார்கே

அனைவரையும் அனைத்து செல்லும் காங்கிரஸின் அணுகுமுறையால் தான் இந்தியா முன்னேறியது என்று அந்த கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் 138வது நிறுவன தினத்தை முன்னிட்டு நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் அந்த கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கட்சியின் கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸார் மத்தியில் மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில் கூறியதாவது: 

காங்கிரஸ்

இந்தியா வெற்றிகரமான மற்றும் வலுவான ஜனநாயக நாடாக உருவெடுத்தது மட்டுமல்லாமல், சில தசாப்தங்களில் பொருளாதாரம், அணுசக்தி மற்றும் மூலோபாயத் துறைகளில் வல்லரசாக மாறியது. விவசாயம், கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறையில் இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகும். இது தானா நடக்கவில்லை. 

மத்திய அரசு

ஜனநாயகத்தில் காங்கிரஸின் நம்பிக்கை மற்றும் அனைவரையும் அழைத்து செல்லும் எங்கள் உள்ளடக்கிய சித்தாந்தம் மற்றும் அனைவருக்கும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கும் அரசியலமைப்பின் மீதான எங்கள் முழு நம்பிக்கையின் காரணமாக இது நடந்தது. இந்தியாவின் அடிப்படைகள் தொடர்ந்து தாக்கப்படுகின்றன. சமூகம் வெறுப்பால் பிளவுபட்டுள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசாங்கம் கவலைப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.