கெஜ்ரிவாலின் அரசு, கெஜ்ரிவாலின் கவுன்சிலர்.. பா.ஜ.க.வின் இரட்டை என்ஜின் அரசாங்கம் முழக்கத்துக்கு ஆம் ஆத்மி பதிலடி
பா.ஜ.க.வின் இரட்டை என்ஜின் (மத்தியில் மற்றும் மாநிலத்தில்) அரசாங்கம் முழக்கத்துக்கு பதிலடியாக, டெல்லி மாநகராட்சி தேர்தலில் கெஜ்ரிவாலின் அரசு, கெஜ்ரிவாலின் கவுன்சிலர் என்ற பிரச்சாரத்தை ஆம் ஆத்மி தொடங்கியுள்ளது.
டெல்லி மாநகராட்சிக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடைபெற உள்ளது. மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லி மநாகரட்சியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி அமைந்தால் மட்டுமே தலைநகரின் சுற்றுப்புறங்களில் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்பதை வலியுறுத்தி, கெஜ்ரிவாலின் அரசு, கெஜ்ரிவால் கவுன்சிலர் என்ற பிரச்சாரத்தை மணிஷ் சிசோடியா தொடங்கியுள்ளார்.
டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மணிஷ் சிசோடியா செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தாலும், பா.ஜ.க. 20 இடங்களை வெல்லும். மாநகாட்சியில் கெஜ்ரிவால் ஆட்சி இருக்கிறது, ஒரு வார்டில் பா.ஜ.க. கவுன்சிலர் ஒருவர் இருக்கிறார் என்ற நிலை வந்துவிடக் கூடாது. கெஜ்ரிவால் ஜி வேலை செய்வார், அவர் சுத்தத்தை உறுதி செய்வார், அவர் சாலைகளை அமைப்பார், அவர் பூங்காக்களை பராமரிப்பார். அவர் தெரு விலங்குகளை கட்டுக்குள் வைப்பார்.
பா.ஜ.க. கவுன்சிலர் தொடர்ந்து போராடுவார். பா.ஜ.க.வுக்கு எதிரான மக்களுக்கு எச்சரிக்கையாக இந்த பிரச்சாரத்தை தொடங்குகிறோம். ஆம் ஆத்மி கவுன்சிலரை தேர்ந்தெடுப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மணிஷ் சிசோடியா டிவிட்டரில், பா.ஜ.க. கவுன்சிலர் ஒரு இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் கெஜ்ரிவாலை துஷ்பிரயோகம் செய்து அந்த பகுதியில் வேலையை நிறுத்துவார். எனவே டெல்லி முழுவதற்கும் கெஜ்ரிவாலின் அரசு, கெஜ்ரிவாலின் கவுன்சிலர் அவசியம் என பதிவு செய்து இருந்தார்.