மாநிலங்களவை இல்லாமல் நாடு செயல்பட முடியாதா?.. அது தேவையா இல்லையா என்பதை ஆராய வேண்டும்.. மணிஷ் திவாரி

 
மாநிலங்களவை

மாநிலங்களவை (ராஜ்யசபா) அது தொடங்கப்பட்டத்தின் முக்கிய நோக்கத்தை நிறைவேற்றத் தவறிவிட்டது, ஆகையால் நாட்டுக்கு இப்போது மாநிலங்களவை தேவையா இல்லையா என்பதை ஆராய வேண்டும் என மணிஷ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை கடந்த சில தினங்களுக்கு முன் அந்த கட்சி அறிவித்தது. ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், அஜய் மாக்கன், ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோரின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதேசமயம், குலாம் நபி ஆசாத், தாரிக் அன்வர் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. மேலும், சொந்த மாநிலங்களிலிருந்து வேட்பாளரை தேர்ந்தெடுக்காமல் வெளி நபர்களை தேர்ந்தெடுத்ததும் காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ்

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தேர்ந்தெடுக்கபடாததற்கு அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிஷ் திவாரி அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், நாட்டுக்கு மாநிலங்களவை தேவையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் மக்களவை எம்.பி.யுமான மணிஷ் திவாரி டிவிட்டரில், என்னுடைய தனிப்பட்ட கருத்து, மாநிலங்களவை எதற்காக அமைக்கப்பட்டதா அந்த செயல்பாடுகளை நிறைவேற்றுவதை நிறுத்தி விட்டது. மாநிலங்களவை தற்போது வாகன நிறுத்துமிடமாக மாறியுள்ளது. நாட்டுக்கு இப்போது மாநிலங்களவை தேவையா இல்லையா என்பதை ஆராய வேண்டும்.

அகமது படேல் விவகாரம்… மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு சமீபத்திய உதாரணம்.. மனிஷ் திவாரி

இப்போது பல தசாப்தங்களாக (பத்தாண்டுகள்) மாநிலங்களவை அது தொடங்கப்பட்டத்தின் முக்கிய நோக்கத்தை நிறைவேற்றத் தவறிவிட்டது, அதாவது மாநிலங்களின் உரிமைகளை வென்றெடுப்பது. ஒரு அடிப்படை கேள்வியை கேட்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்தியாவுக்கு ஏன் கூட்டாட்சி இரண்டாவது சபை தேவைப்படுகிறது? அது இல்லாமல் இந்தியா செயல்பட முடியாதா? மாநிலங்களவை ஒழிக்கப்பட வேண்டுமா? என பதிவு செய்துள்ளார்.