அரசியல் சுற்றுலாவில் நேரத்தை செலவிடும் பார்ட் டைம் முதல்வர் டெல்லிக்கு தேவையில்லை.. கெஜ்ரிவாலை தாக்கிய மீனாட்சி லேகி

 
டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கு  இலவச பயணம்….. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

அரசியல் சுற்றுலாவில் நேரத்தை செலவிடும் பார்ட் டைம் முதல்வர் டெல்லிக்கு தேவையில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி விமர்சனம் செய்தார்.

வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலின்படி,  டெல்லி அரசு கடந்த ஏழு ஆண்டுகளில் சுற்றுச்சூழல் செஸ் என ரூ.1,286 கோடி வசூலித்துள்ளது. இதில் மாசுபாட்டை எதிர்த்து போராடுவதற்காக கெஜ்ரிவால் அரசாங்கம் ரூ.272 கோடி மட்டுமே செலவிட்டுள்ளது. 

மீனாட்சி லேகி

இந்த நபர் (அரவிந்த் கெஜ்ரிவால்) எதுவும் செய்யவில்லை. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரச்சாரத்திற்காக அரசியல் சுற்றுலாவில் நேரத்தை செலவிடும் பகுதி நேர முதல்வர் டெல்லிக்கு தேவையில்லை. கெஜ்ரிவால் அரசாங்கத்தின் செயலற்ற தன்மை மற்றும் பொறுப்புகளில் இருந்து ஒடிப் போவது தான் அதிக எண்ணிக்கையிலான முதியவர்கள் மற்றும் குழந்தைகள் காற்று மாசுபாடு தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுவதற்கு காரணம். 

வினய் குமார் சக்சேனா

ஸ்மோக் டவர் பராமரிப்புக்காக இவ்வளவு அதிக தொலை செலவழித்தும், அது ஏன் செயல்படவில்லை என்பதை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடுமாறு டெல்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். டெல்லி யூனியன் பிரதேச முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது அடிக்கடி குஜராத் சென்று  ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.