இந்திய தேர்தல் ஆணையம் இப்போது பா.ஜ.க.வின் கிளையாக மாறிவிட்டது... மெகபூபா முப்தி குற்றச்சாட்டு
இந்திய தேர்தல் ஆணையம் இப்போது பா.ஜ.க.வின் கிளையாக மாறி விட்டது என்று காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றச்சாட்டினார்.
ஜம்மு அண்ட் காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் இப்போது பா.ஜ.க.வின் கிளையாக மாறிவிட்டது. இமாச்சல பிரதேசத்தில் மதப் பிரச்சாரத்தின் அடிப்படையில் பா.ஜ.க. பிரச்சாரம் செய்த போது அது அமைதியாக இருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் இப்போது முன்பு போல் சுதந்திரமாக இல்லை.
பா.ஜ.க.வின் சமிக்ஞைகளின்படி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது. ஜம்மு அண்ட் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தற்போதைய அரசாங்கம் எல்லாவற்றையும் சீர்குலைக்க உள்ளது. காஷ்மீர் பண்டிட்கள் காஷ்மீரில் நிலைமை சரியாகும் வரை ஜம்முவிற்கு இடம் மாற்றப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரி வருகின்றனர். ஆனால் அவர்கள் (காஷ்மீர் அரசு) பண்டிட்களின் வருமானம் மற்றும் ரேஷன் ஆகியவற்றை நிறுத்துகிறார்கள்.
வாக்குகளை பெற பண்டிட்களின் கஷ்டத்தை பா.ஜ.க. பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஜம்மு அண்ட் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 2023ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கடைசியாக அங்கு 2014ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.