இளைஞர்களுக்கு மத்திய அரசு எதுவும் வழங்கவில்லை, அதனால்தான் அது மதவாத அரசியலில் ஈடுபடுகிறது.. மெகபூபா முப்தி
இளைஞர்களுக்கு மத்திய அரசு எதுவும் வழங்கவில்லை. அதனால்தான் அது (மத்திய பா.ஜ.க. அரசு) மதவாத அரசியலில் ஈடுபடுகிறது என மெகபூபா முப்தி குற்றம் சாட்டினார்.
காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: காஷ்மீரை மக்கள் கவனிக்க வேண்டிய நேரம் வரும். நம்மிடம் காஷ்மீரி பண்டிட்கள் இருந்தனர். ஆனால் இன்று என் குழந்தைகள் என்னிடம் இந்த பண்டிட்கள் யார், அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்கிறார்கள்.
ஏனெனில் அவர்கள் (காஷ்மீர் பண்டிட்கள்) எண்ணிக்கை குறைந்து விட்டது. அதேபோல், நாங்கள் உறுதியாக நிற்க முடியாவிட்டால் நாங்கள் இருப்பதை நிறுத்தி விடுவோம். இன்று விவசாயிகளிடமிருந்து நிலங்கள் பறிக்கப்படுகின்றன மற்றும் வேலைகள் பறிக்கப்படுகின்றன. கல் எறியப்படாவிட்டாலும் அல்லது பணிநிறுத்தம் காணப்படாவிட்டாலும் இங்கு எங்களிடம் 10 லட்சம் துருப்புகள் (பாதுகாப்பு படை வீரர்கள்) உள்ளன.
குஜராத் மாதிரியை எல்லா இடங்களிலும் திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. இளைஞர்களுக்கு மத்திய அரசு எதுவும் வழங்கவில்லை. அதனால்தான் அது (மத்திய பா.ஜ.க. அரசு) மதவாத அரசியலில் ஈடுபடுகிறது. ஹிட்லரை போல முஸ்லிம்களுக்கு எதிராக ஏதாவது இருந்தால் மத்திய அரசு சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.