அமைச்சர் சேகர்பாபுவின் அறிவிப்பு ஆபத்தானதாகும் - விசிக எதிர்ப்பு

 
p

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மைதானத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.  இதை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் வந்து ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய  சேகர் பாபு, முதலமைச்சர் வழிகாட்டுதல் படி, இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு, பொற்காலம் என போற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது.   கோயில் நிலங்கள் மீட்பு, திருக்கோயில் குடமுழுக்கு, அறநிலையத்துறை சார்பில் பள்ளிகள் கல்லூரிகள், திருக்கோயில் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு என பல்வேறு நல திட்டங்கள் நிகழ்த்தியுள்ளது என்றார்.

vvv

தொடர்ந்து பேசிய அவர்,  சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை சிவராத்திரியாக கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் அறநிலையத்துறை வரலாற்றில் முதல் முறையாக மகா சிவராத்திரி அன்று 100-க்கும் மேற்பட்ட ஆன்மீக கலைஞர்கள் இணைந்து மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 2-ஆம் தேதி காலை 6 மணி வரை, 12 மணி நேர மகா சிவராத்திரி விழா மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மைதானத்தில் நடைபெற இருக்கிறது என்றார்.

இதற்காக 2, 500 இருக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். 

,a

இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளரான வன்னியரசு,   மார்ச்1 அன்று மயிலாப்பூர கோவிலில் மகா சிவராத்திரி ஒன்றை நடத்தப்போவதாக அமைச்சர் பிகே சேகர்பாபு, அறிவித்துள்ள அறிவிப்பு ஆபத்தானதாகும். ஆன்மீகப் பரப்புரையை அரசே முன்னெடுப்பது திராவிட கருத்தியலுக்கு எதிரானதாகும்.  தமிழ்நாடு முதல்வர்  இச்செயல்திட்டத்துக்கு அனுமதிக்க கூடாது என்று கேட்டுக்கொண்டிருக்கும் அவர்,   சனாதனக்கும்பலுக்கு ஆதரவான மகா சிவராத்திரி...இது திராவிட மாடலா?ஆரிய மாடலா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.