முதல்வரிடம் கூட இல்லை! ஆட்சிக்கு வந்த ஒரே வருசத்துல வெளிநாட்டு சொகுசு காரை இறக்குமதி செய்த நேரு
தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு வெளிநாட்டிலிருந்து சொகுசு காரை இறக்குமதி செய்து இருக்கிறார். டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி 300 என்ற சொகுசு காரை அவர் இறக்குமதி செய்து இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் அமைச்சர் ஒருவர் இப்படிப்பட்ட சொகுசு காரை இறக்குமதி செய்து இருக்கிறார் என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது .
தமிழக அமைச்சர்கள் அனைவரும் அரசு சார்பில் வழங்கப்பட்டிருக்கும் இன்னோவா கிரிஸ்டா கார்களை பயன்படுத்தி வருகிறார்கள். முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் கூட இல்லாத டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி 300 என்ற புத்தம் புதிய 2022 ஆம் ஆண்டு மாடல் எஸ்யூவி ரக காரை அமைச்சர் கே. என். நேரு வாங்கியிருக்கிறார். அதுவும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இருக்கிறார். இவர் ஏற்கனவே லேண்ட் க்ரூஸர் ரக காரர்களைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்.
அமைச்சர் ஆன பின்னர் புதிய வகை புதிய வரவாக இருக்கும் என்ற ஸ்போர்ட்ஸ் மாடல் காரை இறக்குமதி செய்திருக்கிறார். டொயோட்டா நிறுவனம் இந்த காரை அறிமுகம் செய்வதாக அறிவித்ததுமே பல நாடுகளில் நிறைய பேர் புக் செய்து நான்கு ஆண்டுகளாக இந்த காத்திருக்கிறார்கள். இந்தியாவில் இந்த காரின் அறிமுக தேதி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் தேதி என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அப்படி இருக்கும்போது அமைச்சர் கே. என். நேரு அந்த காரை நேரடியாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இருக்கிறார். இந்த புதிய காரின் விலையை வரும் பண்டிகை காலத்தில்தான் டொயோட்டா அறிவிக்க இருப்பதாக இருக்கிறது. அதற்கு முன்னதாகவே 2 கோடி ரூபாய்க்கும் மேலாக அதிக செலவு செய்து இந்த டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி 300 காரை அமைச்சர் கே. என். நேரு இறக்குமதி செய்திருக்கிறார்.
திமுக ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் அமைச்சர் ஒருவர் இப்படிப்பட்ட சொகுசு காரை இறக்குமதி செய்திருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.