ஓபிஎஸ் அதிரடி நீக்கம்! நமது அம்மா நாளிதழ் நிறுவனர் பொறுப்பு பறிபோனது

 
va

 நமது அம்மா நாளிதழ் நிறுவனர் பொறுப்பிலிருந்து ஓபிஎஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

 திட்டமிட்டபடி கடந்த 23ஆம் தேதியன்று நடந்த பொதுக்குழுவை களேபரம் ஆக்கிய எடப்பாடி டீம்,  அதேபோல் திட்டமிட்டபடி அடுத்த 11ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டி அதில் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளர் ஆக்கிவிட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

na

 குறிப்பாக ஜெயக்குமார் ,சிவி சண்முகம் இருவரும் தான் தீவிரமாக இதற்காக இயங்கி வருகின்றனர் என்று சொல்கிறார்கள் கட்சியினர்.   ஒற்றை தலைமைக்கு அதிகம்  குரல் கொடுப்பதும் ,  ஓபிஎஸ்க்கு எதிராக அதிகம் குரல் கொடுப்பதும் சிவி சண்முகம் தான் என்கிறார்கள் கட்சியினர் .  

 எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆன பின்னர் ஓ. பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியை விட்டு நீக்க சட்டப் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்று தகவல் பரவியது .   இந்த நிலையை நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பொறுப்பிலிருந்து ஓ. பன்னீர் செல்வத்தை நீக்கியுள்ளனர் . 

ஓ.  பன்னீர் செல்வத்தை நீக்கிய பின்னர் இன்று வெளியாகியிருக்கும் நமது அம்மா நாளிதழில் முழுக்க முழுக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.