நாளை தீர்ப்பு- கட்சி நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் பரபரப்பு ஆலோசனை

 
ops

ராமநாதபுரம், ஈரோடு  மாவட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் ஓபிஎஸ் உடன் அவரது பண்ணை வீட்டில் ஆலோசனை நடத்தினார்.

மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் திடீர் ஆலோசனை.. இபிஎஸ் கூட்டத்தில்  பங்கேற்றவர்களும் பங்கேற்பு | OPS meeting with his Supporters in Periyakulam  Farm House | Puthiyathalaimurai ...

அதிமுகவின் உச்சகட்ட மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ள சூழலில்  உச்ச நீதிமன்றத்தில்ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லாது மற்றும் பொதுச் செயலாளர் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

இது தொடர்பாக வரும் 21ஆம் தேதி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு பதில் அளிக்க நீதிமன்றம் அதுவரை பொதுச் செயலாளர் தடையும் விதித்தது.
இந்த சூழலில் ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சென்று தொண்டர்களை சந்திப்பதற்கு முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் ஓ. பன்னீர்செல்வத்தை பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் பண்ணை வீட்டில் சந்தித்து ஆசி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக ஓபிஎஸ்-ஆல் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்ட தருமர் தலைமையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட கழகம், ஒன்றிய கழகம், பேரூர் கழகம், நகர் கழகம் ஆகிய நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் பண்ணை வீட்டிற்கு வருகை தந்து பூ கொத்து கொடுத்து ஆதரவு தெரிவித்து ஆசி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சிறுவலூர் மாரப்பன் தலைமையில், ஓபிஎஸ்-ஆல் ஒன்றிய பேரூர் கழகச் செயலாளர்  புதிதாக நியமிக்கப்பட்ட நகர், ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட  நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கூறுகையில், ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய பொழுது அவருடன் ஆதரவாக இருந்த தங்களை கட்டம் கட்டி  ஒதுக்கி வைத்த  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை எதிர்த்து ஈரோடு மாவட்டத்தில் ஓபிஎஸ்-இன் ஆதரவை பெருக்கி வருவதாக தெரிவித்தனர்.