விஜயபாஸ்கர் தொகுதியில் ஓங்கிய ஓபிஎஸ் கை

 
cv

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளருமானவர் சி. விஜயபாஸ்கர்.  இவர் சட்டமன்ற தொகுதி முழுவதும் ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டு இருக்கிறது.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது விராலிமலை சட்டமன்றத் தொகுதி.   இத்தொகுதியின் உறுப்பினர் விஜயபாஸ்கர். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார்.    எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளரான அவர் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்.

oo

 இந்த நிலையில் அவரின் விராலிமலை சட்டமன்றத் தொகுதி முழுவதும் ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன.   கழகத்தின் ஒற்றை தலைமை ஏற்று வழிநடத்திட வாருங்கள் என்று அழைப்பது போல் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கின்றன.

 எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் தொகுதியில் ஓபிஎஸ் கை இப்படி ஓங்கி இருப்பதற்கு என்ன காரணம் என்கிற சலசலப்பு கட்சியிலேயே எழுந்திருக்கும் நிலையில் ,   முன்னாள் அதிமுக சேர்மன் சுப்பையா தலைமையிலான ஆதரவாளர்கள் தான் ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி  இருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.