தன்னுடைய நிறத்தை இப்போது ஓபிஎஸ் காட்டி இருக்கிறார்- கேபி முனுசாமி
எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுக்க எடப்பாடி பழனிச்சாமி அதை நிராகரித்து இருக்கிறார். எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்று ஓபிஎஸ் சொன்னது சசிகலாவையும், டிடிவி தினகரனையும் சேர்த்து தான் என்பதால் எடப்பாடி அணியினர் அதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
சசிகலாவால் முதல்வர் பதவியை பெற்ற எடப்பாடி பழனிச்சாமியோ சசிகலா அதிமுகவிற்குள் வரவே கூடாது என்று பிடிவாதமாக இருக்கிறார் . இந்த நிலையில் எடப்பாடி, சசிகலா ,தினகரன் உட்பட எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்று ஓபிஎஸ் சொல்லி இருப்பதால் அவரது பேச்சை நிராகரித்திருக்கும் எடப்பாடியும் அவரது தரப்பினரும் .
ஓபிஎஸ்சின் முன்னாள் ஆதரவாளரும் தற்போதைய எடப்பாடி ஆதரவாளருமான கே. பி. முனுசாமி, ’’சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று ஓபிஎஸ் சொல்கிறார். ஆனால் அவர் தர்ம யுத்தத்தை தொடங்கிய போது அதன் முக்கிய நோக்கமே சசிகலாவே கட்சியில். ஏற்க சேர்க்க கூடாது என்பதுதான் சசிகலாவும் அவரின் குடும்பமும் வரக்கூடாது என்பதற்காகத்தான் தர்மயுத்தமே நடத்த தொடங்கினார் . அப்படிப்பட்டவர் சுயநலத்திற்காக தன்னுடைய நிறத்தை இப்போது ஓபிஎஸ் காட்டி இருக்கிறார்’’ என்று ஆவேசப்பட்டவர்,
’’ ஒன்றிணைவது பற்றி இன்றைக்கு கருத்துக் கொள்ளும் ஓபிஎஸ் பொதுக்குழுவிற்கு நேராக வந்திருந்தால் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார் என்று ஏற்று இருப்போம். ஆனால் அதற்கு மாறாக மறைந்த தலைவர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா அமர்ந்த கட்சி அலுவலகத்தை சூறையாடினார். அதற்கு தலைமை ஏற்றவர் தான் ஓபிஎஸ். அற்போது ஏன் இந்த ஒற்றுமை கருத்து அவருக்கு வரவில்லை? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் . கட்சிக்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் வெளியில் இருக்கிறார்கள். கட்சியில் ஆதாயம் அடைந்தவர்களை தான் அவர் ஒன்றிணையச் சொல்கிறார். ஏற்று கொள்கிறார் ஆகாயமடைந்தவர்கள் கட்சிக்குத் தேவையில்லை. உழைப்பவர்கள் தான் தேவை ’’என்று சொல்கிறார் கே. பி. முனுசாமி.