ஓபிஎஸ் பாஜகவில் இணைகிறார்... - பொதுச்செயலாளர் சீனிவாசன் பரபரப்பு

 
ooo

ஓபிஎஸ் பாஜகவில் தாராளமாக இணையலாம்.   முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் கூட பாஜகவில் இணையலாம் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்திருக்கிறார் பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன்.

 பாஜகவின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் .  அப்போது அவர்,   ஓ. பன்னீர்செல்வம் பாஜகவில் இணைய விரும்புகிறார் என்கிற ஒரு கருத்து இருக்கிறது.  ஒ.   பன்னீர்செல்வம் இணைய வேண்டும் என்று விரும்பினால் தாராளமாக பாஜகவில் இணையலாம் என்றார்.

bg

தொடர்ந்து பேசிய சீனிவாசன்,   தமிழக முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் கூட பாஜகவில் இணையலாம்.  நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்தார்.

 அவர் மேலும் பேசியபோது,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அவர் திருமாவளவன் குறித்து கடுமையாக சாடினார்.   திருமாவளவனின் ஆடை அலங்காரங்கள் சமூக நீதிதான்.   அந்த சமூக நீதி ஆடைகள் தற்போது இல்லாமல் போய்விட்டது.   மேடைகள் எல்லாம் சனாதனம் பற்றி அதிகம் பேசி இந்து மதத்தை ஒழிப்போம் என சொல்லி தற்போது யாருக்கு திருமாவளவன் ஆதரவு கொடுக்கிறார் என்று பார்க்க வேண்டும்.   ஏன் இந்த இரட்டை வேடம் போடுகிறார் திருமாவளவன்? திருமாவளவன் சனாதனத்தை தவறாக பேசி மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கிறார். 

 குடியரசு தலைவர் தேர்தலுக்கு பாஜகவின் சார்பாக திரௌபதி முர்மு நிறுத்தப்பட்டு இருக்கிறார்.   அந்த வகையிலும் சமூக நீதிக் கொள்கைக்கு உட்பட்டவர் . அவர் ஒரு பெண் . பாஜக எப்போதெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அப்போதெல்லாம் ஒரு முஸ்லிமை ஜனாதிபதி ஆக்கியிருக்கிறார்கள்.  தற்போது ஒரு பெண்ணை ஜனாதிபதியாக்க  முன் வந்திருக்கிறோம் என்றார்.