நேரடியாக களத்தில் குதித்த ஓபிஎஸ்! அதிர்ந்து நிற்கும் எடப்பாடி

 
oo

அதிமுக பொது குழுவிற்கு தடை கேட்ட  ஓபிஎஸ் தரப்பின் மனுவை விசாரித்த நீதிபதிகள் தடை விதிக்க மறுத்து விட்டனர்.  இதை அடுத்து ஓ. பன்னீர்செல்வமே நேரடியாக களத்தில் குதித்து முறையற்று நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர,  இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

 கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி அன்று 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக இருந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்தார்.   தனி நீதிபதி இந்த வழக்கை விசாரித்து இதற்கு தடை விதிக்க மறுத்தார்.   உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது.   நள்ளிரவில் இரண்டு நிதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை நடந்தது .  பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர தனித் தீர்மானம் தனி முடிவுகள் எதுவும் எடுக்கக் கூடாது என்ற உத்தரவுடன் பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது .  ஆனால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் இருபத்தி மூன்று தீர்மானங்களையும் நிராகரித்து விட்டு புதிய முடிவுகள் எடுக்கப்பட்டன .  அதன்படி வரும் 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட விருக்கிறது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது .

rdd

இதை எதிர்த்து சண்முகம் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.   அதிமுக பொதுக்குழுவை தடை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.   இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து அதிமுக பொதுக் குழுவிற்கு தடை விதிக்க நேற்று மறுத்து விட்டனர்.

 இந்த நிலையில் ஓ.  பன்னீர்செல்வமே நேரடியாக களத்தில் குதித்து இருக்கிறார்.   ஓ . பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவினை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் குரு பிரசன்னகுமார் ஆஜராகி முறையிட்டார்.  அவரது முறையீட்டினை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி,  அவசர வழக்காக நாளை விசாரிக்க ஒப்புதல் அளித்து இருக்கிறார். 

hhh

 பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.  அப்படி இருக்கும்போது வரும் 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது என்று நேற்று மாலையில் தான் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.   உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்படும் இந்த பொதுக்குழுவை தடை செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை வைத்திருக்கிறார்.