அதிமுக பொதுக்குழு கூட்டத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்! ஓபிஎஸ் தரப்பு போலீசில் மனு
அதிமுக பொதுக்குழு 23ஆம் தேதி நடைப்பெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என ஆவடி ஆணையர் அலுவலகத்தில் ஒபிஎஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் 23 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஒபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஏற்பட்டது. இதனால் அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி வழங்க கூடாது என ஒபிஎஸ் தரப்பும் அனுமதி வழங்க வேண்டும் என ஈபிஎஸ் தரப்பும் மாறி மாறி மனு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பென்சமின் ஜூன் 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு டி.ஜி.பி. ஆவடி காவல் ஆணையர் மற்றும் திருவேற்காடு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டுமென மனு அளித்து இருந்தார்.
இந்த மனு விசாரித்த நீதிபதி காவல்துறையில் கேட்க்கப்பட்டுள்ள 26 கேள்விகளுக்கு பதிலளிக்க கோரி இருந்தார். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் திருவேற்காடு காவல் நிலையத்தில் பதில் அளித்தார். இதனிடையே அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி வழங்க கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் மனு அளித்துள்ளார். இதனை வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் நேரில் சென்று அளித்தார். அந்த மனுவில் 23 ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் பொதுக்குழுவிற்கு அனுமதி வழங்க கூடாது என மனுவில் குறிப்பிடபட்டு இருந்தது. மேலும் பா.பென்சமின் பாதுகாப்பு கோரி இருப்பது தன்னிச்சையான முடிவு கழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது