ப.சிதம்பரமா? கே.எஸ்.அழகிரியா?- கடும் போட்டி

 
க்ச்

காங்கிரசுக்கு ஒரு இடம் கிடைத்திருப்பதால் அந்த ஒரு இடத்திற்கு வரப்போவது ப.சிதம்பரமா? கே.எஸ்.அழகிரியா?  என்று பரபரப்பு நிலவுகிறது தமிழக காங்கிரசில்.

 தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட  ஆறு எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.   காலி இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.   ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது . தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் இந்த தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.  தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உட்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.

எ
 
 தமிழகத்தில் இருக்கும் ஆறு மாநிலங்களவை எம்பிக்கள் பதவி காலம் ஜூன் 29ஆம் தேதி முடிவடைய இருப்பதால், அடுத்த  6 எம்.பிக்கள் யார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.  ஒரு மாநிலங்களவை எம்பி பதவிக்கு 34 அல்லது 36 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது. இந்த அடிப்படையில் திமுகவுக்கு நான்கு எம்பி பதவிகள்,  அதிமுகவுக்கு இரண்டு எம்பி பதவிகள் கிடைத்திருக்கிறது.  இதில் திமுக மூன்று இடங்களை எடுத்துக்கொண்டு,  கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒரு இடத்தை ஒதுக்கியிருக்கிறது.   இதில், திமுக தனது மூன்று எம்.பிக்களை அறிவித்துவிட்டது.  அதிமுகவில் இரண்டு எம்.பிக்கள் யார் என்பதில் கடும்  போட்டி நிலவுகிறது.  

 திமுகவின் மூன்று வேட்பாளர்கள் இரா.கிரிராஜன், தஞ்சை கல்யாணசுந்தரம்,  கே. ஆர். என். ராஜேஷ்குமார் என்று  மூன்று வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். கூட்டணியான காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் அல்லது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகிய இரண்டு பேரில் ஒருவர் போட்டியிடுவார் என்று கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.