செந்தில் பாலாஜி பாணியில் பழனியப்பன்?

 
p

செந்தில் பாலாஜி பாணியில் பழனியப்பன் செயல்படுவார் என்று  தலைமை நம்புவதாக தெரிகிறது.   அதனால் தான் அவருக்கு அந்த பதவியை வழங்க திட்டமிட்டு இருக்கிறது. 

 திமுகவில் கடந்த சட்டமன்றத் தேர்தல், நகர்மன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் சரியாக வேலை செய்யாமல் இருக்கும் மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை முடிவு செய்து அதற்கான பட்டியல் ஒன்றை தயாரித்து வைத்திருப்பதாக தகவல் பரவுகிறது . அந்த பட்டியல் அடிப்படையில் தர்மபுரி, தென்காசி, நெல்லை , கோவை மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது என்றும் தகவல்.   இந்த மாத இறுதிக்குள் மாவட்ட செயலாளர் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியிட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

a

 புதிய மாவட்ட செயலாளர் மாற்றம் பட்டியலில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பெயர் முதலில் இருக்கிறது என்கிறார்கள்.   தர்மபுரி மாவட்டத்தில் பிரபலமான முகமாக இருக்கும் பழனியப்பனுக்கு மாவட்ட பொறுப்பு வழங்குவதால் திமுகவை வலுவான நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்று தலைமை நினைக்கிறதாம். 
 மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பாணியில் பழனியப்பனும் செயல்படுவார் என்று தலைமை நம்புகிறதாம்.

 கரூர், கோவையை திமுகவின் கோட்டையாக மாற்றும் தலைமையின் அசைன்மென்ட் ஏற்று செந்தில் பாலாஜி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.  அதே பாணியில் பழனியப்பன் தலைமையினை திருப்திப்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.  அதனால் தலைமை அவருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கி கௌரவிக்க திட்டமிட்டு இருக்கிறதாம்.