திமுகவின் B teamஆ பண்ருட்டி ராமச்சந்திரன்?

 
sp

 ஓபிஎஸ் அணியில் இருந்தாலும் தற்போதைய சூழலில் எல்லா அணிகளும் இணைந்தாலும் கூட அதிமுக வெற்றி பெற வாய்ப்பில்லை என்று சொல்லி அதிமுகவினருக்கு ஷாக் கொடுத்திருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனை திமுகவின் பிடீம் என்று  விமர்சித்துள்ளார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

v

எம்ஜிஆர் அமைச்சரவையில் முக்கிய இடத்தில் இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.  விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது அக்கட்சியில் இருந்த மூத்த அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன்.  பின்னர்  தேமுதிகவில் ஏற்பட்ட அதிருப்தியினால் வெளியேறி மீண்டும் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.  ஆனாலும் அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் எதுவும் இல்லாமல் தீவிர அரசியலில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி இருந்தார்.  ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தற்போது அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவில் ஓபிஎஸ்க்கு ஆதரவாளராக இருந்து வருகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில்தான்  எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆலோசனை கூட்டத்தை கூட்டினார் ஓபிஎஸ்.  

ja

ஆனாலும்,   தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,   எடப்பாடி தலைமையில் அடுத்த தேர்தலை அதிமுக சந்தித்தால் அதிமுக சுத்தமாக தோல்வியை பெரும்.  அதில் எந்த சந்தேகமும் கிடையாது என்று சொன்னவர்,  அதிமுகவின் அனைத்து அணிகளும்  சேர்ந்தாலும் கூட வெற்றி வருவதற்கான வாய்ப்பு இல்லை. ஓட்டு கேட்கவே இவங்க போக முடியாது .  நீங்கள் மறுபடியும் மக்களின் நல்லெண்ணத்தை பெறுவதற்காக திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும் .  அப்போதுதான் எதிர்காலத்தில் வெற்றி பெற முடியுமே தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்திருக்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்.   

 அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி,  ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என்று நான்கு அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள்.  இவர்களெல்லாம் ஒன்றிணைந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அணிக்குத்தான் வெற்றி அதிகம் இருக்கும்.  அதனால் இவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூட்டணியில் இருக்கும் பாஜக அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இவர்கள் இணைந்தாலும் வெற்றி வாய்ப்பு இல்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்னதற்கு,  

e

பண்ருட்டி ராமச்சந்திரன் மீது நிறைய மரியாதை இருக்கிறது.  அதனால் அவரை கடுமையாக நான் விமர்சனம் செய்யவில்லை என்று சொன்ன ஜெயக்குமார் , தன்னை அடையாளம் காட்டி அதிமுகவிற்கு நான் சாகும் வரை விசுவாசமாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன். ஆனால் அவரை திமுகவின் பி டீமாகத்தான் பார்க்கிறேன்.   உங்களை வளர்த்த இயக்கத்திற்கு எதிராக செயல்படுகிறீர்கள் என்று அவரைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

மற்றபடி அதிமுகவை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சொன்ன சசிகலாவின் கருத்து ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய்.   பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த  ஒரு உருவமாய் இருப்பவர்தான் சசிகலா என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.