அதிமுக உங்க அப்பனோட கட்சி இல்லை! ஈபிஎஸ்க்கு எதிராக போஸ்டர்

 
Edappadipalanisamy

அதிமுக உங்க அப்பனோட கட்சி இல்லை என எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பரமக்குடியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

எப்ப ஜெயிலுக்குப் போவார் எடப்பாடி பழனிச்சாமி?.. சசிகலாவைப் பார்க்க! | Will  Edappadi go to jail tomorrow? - Tamil Oneindia

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை நிலவி வரும் நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு ஆதரவாக தொண்டர்கள் சுவரொட்டிகள் ஒட்டி ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிமுக மாணவர் அணி இணை செயலாளர் சிவாதேவன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பரமக்குடி நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளார். அதில், அம்மாவால் மூன்று முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் ஓ.பன்னீர்செல்வத்தை பொதுக்குழுவில் அவமானப்படுத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற முயன்றதை கண்டிக்கிறேன்.

“கூவத்தூரில் முட்டிபோட்டு முதல்வரான ஈனப்பிறவி எடப்பாடி பழனிச்சாமி”எனவும், அதிமுக உங்கள் அப்பனோட கட்சி இல்லை, உனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வசனங்கள் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு தொண்டனின் ரத்தத்தில் வளர்ந்த மாபெரும் இயக்கத்தை அழித்து, அதற்கு துணையாக இருக்கும் தலைமை கழக நிர்வாகிகளையும், மாவட்ட கழக நிர்வாகிகளையும் வன்மையாக கண்டிக்கிறேன் என பரமக்குடி நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.