அது ராணியாக இருந்தாலும் சரி, இளவரசராக இருந்தாலும் சரி... சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லை.. மத்திய அரசு

 
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

அது ராணியாக இருந்தாலும் சரி, இளவரசராக இருந்தாலும் சரி,  சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்று காங்கிரஸூக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிலடி கொடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நடந்த போராட்டங்களுக்கு பிறகு 24 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்வினையாற்றினர். ராஜஸ்தான் காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு விரும்பவில்லை. 

ராஜஸ்தான் காங்கிரசில் வெடிக்கும் உட்கட்சி சண்டை… முதல்வர் வீட்டில் நடக்கும் கூட்டத்தை புறக்கணிக்கும் சச்சின் பைலட்

வெளியே, அரசியல் பழிவாங்கலுக்காக சோனியா காந்தி துன்புறுத்தப்படுகிறார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் போராட்டங்கள் நடந்தன. ஆனால் நாங்கள் யாரையும் இடைநீக்கம் செய்யவில்லை. காங்கிரஸ் அலுவலகம் காவல் நிலையமாக மாறியுள்ளது. அங்கு அவர்களால் (காங்கிரஸால்) போராட்டம் நடத்த முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். சச்சின் பைலட்டின் குற்றச்சாட்டுக்கு மத்திய  அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிலடி கொடுத்தார்.

பிரகலாத் ஜோஷி

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ஜனநாயகம் மற்றும் சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லை, அது ராணியாக இருந்தாலும் சரி, இளவரசராக இருந்தாலும் சரி. நீதித்துறைக்கும், சட்டத்துக்கும் மேலாக காங்கிரஸ் கட்சி தன்னை கருதுகிறது. விசாரணையில் இருந்து ஏன் தப்பிக்க நினைக்கிறார்கள், விசாரணையை முடிக்கட்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும் என தெரிவித்தார்.