அந்தரங்க வீடியோ - சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்
ஒரு பெண்ணுடன் அமைச்சர் நெருக்கமாக இருப்பது போன்ற அந்தரங்க வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ராஜஸ்தான் மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சலே முகமது. அம்மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு அமைச்சராக இருக்கும் சலோ முகமது அரைகுறை உடை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுடன் வாட்ஸ் அப் காலில் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
இது ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது .
இதை அடுத்து அமைச்சர் சலே முகமதுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள். பாஜக மூத்த தலைவர் அமித் மால்வியா இதுகுறித்து, ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் காஜி பகீரின் மகன் தான் இந்த சலே முகமது. வாரிசு அரசியல் காரணமாகத்தான் இவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. சோனியாவுக்கு மிகவும் வேண்டியவர். ஓட்டு வங்கி அரசியல் காரணமாகத்தான் இவரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் அசோக் கெலாட் நீக்கவே மாட்டார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்தும், அமைச்சர் சலே முகம்மது தரப்பிலிருந்தும் எந்த பதிலும் தெரிவிக்கப்படாமல் உள்ளது.