அவரை சமாதானப்படுத்த வராதீங்க..ஓபிஎஸ்சை சந்திக்க போன மாஜிக்களை மடக்கிய ஆதரவாளர்கள்

 
po

 எதிர்க்கட்சித் தலைவர் விவகாரத்திலும், முதல்வர் வேட்பாளர்  விவகாரத்திலும் ஓ.  பன்னீர் செல்வத்தை சமாதானப்படுத்தி காரியம் சாதித்தார் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.   ஓபிஎஸ் விடாப்பிடியாக இருந்தபோதும் அவர் வீட்டுக்கு அமைச்சர்கள் அடுத்தடுத்து படையெடுத்தனர்.  சமாதானப்படுத்தி காரியம் சாதித்துக் கொண்டனர்.  இப்படி சமாதானப்படுத்தி சமாதானப்படுத்தி அவரை உட்கார வைத்து விட்டார்களே.. எடப்பாடி துரோகி என்று கொதித்தெழுந்து உள்ளனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

 ஒற்றைத் தலைமை விவகாரம் அவ்வப்போது எழும்போதெல்லாம் ஓ. பன்னீர்செல்வம் -எடப்பாடி பழனிச்சாமி இருவருக்குமே கட்சிக்கு இது தேவையில்லாத பழக்கம். இது தேவையில்லாத பிரச்சனை இதைப் பற்றி பேச வேண்டாம் என்று சொல்லி வந்தனர்.  ஆனால் இந்த முறை ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கி இருக்கும் போது இது பற்றி பேச வேண்டாம் என்று ஓ. பன்னீர்செல்வம் சொல்லவில்லை  எடப்பாடி பழனிச்சாமியும் சொல்லவில்லை.

o

 பன்னீர்செல்வம் எதுவுமே சொல்லாமல் இருக்கும்போது,  எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து பேசி முடிவு எடுப்போம் என்று சொல்லியிருக்கிறார் . இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி , பன்னீர்செல்வம் இருவர் வீட்டிலும் ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.  அவர்களுக்கு ஆதரவாகவும் நகரமெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன . இதில் ஒரு ஒரு ஆதரவாளர் இன்னொருவர் ஒட்டி வரும் போஸ்டரை கிழிக்க அது வேறு ஒரு பக்கம் பிரச்சனை எழுந்திருக்கிறது.

 காயம்பட்டு ஆவேசத்தில் இருக்கும் பன்னீர் செல்வத்தை சமாதானப்படுத்த மாஜி அமைச்சர்கள் அவரை சந்திக்க வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.  அவர்களையும் மடக்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்,  இனிமே யாரும் இங்கே வராதீங்க ஐயா.. சமாதானப்படுத்த வேண்டும் என்று யாரும்  வராதீங்க.  சமாதானப்படுத்துறேன்..சமாதானப்படுத்துறேன் என்று சொல்லிட்டு அவரை உட்கார வச்சிட்டீங்க.   ஒற்றை தலைமை ஐயா தலைமையில் தான் வரணும் . அவரை உட்கார வையுங்க . ஐயாவை தலைமையில் உட்கார வையுங்க என்று திண்டுக்கல் சீனிவாசன்,  உதயகுமாரை சூழ்ந்துகொண்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கமிட,  சரி சரி அப்படியே செய்கிறோம் என்று சொல்லிவிட்டு அவர்கள் காரில் ஏறி எஸ்கேப் ஆகி இருக்கிறார்கள் .

எடப்பாடி துரோகி.   துரோகி எடப்பாடி இடம் கட்சியை விட்டுடாதீங்க . எடப்பாடி எப்படி கட்சியை வாங்கினார் என்று உங்களுக்கு தெரியும்.  பார்த்து ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சத்தம் போட தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து எஸ்கேப் ஆகி இருக்கிறார்கள்.