ஓபிஎஸ் பற்றிய கேள்வி- கடுப்பான செல்லூர் ராஜூ
எந்த பேட்டியாக இருந்தாலும் கலகலப்பாகவே பதில் சொல்லுபவர் செல்லூர் ராஜு. அவரே இன்று ஓபிஎஸ் பற்றிய கேள்விக்கு செம கடுப்பாகி விட்டார். அட போங்கப்பா உங்களுக்கு இதே வேலையா போச்சு என்று ஆத்திரத்துடன் நகர்ந்தார்.
மதுரையில் பைக்காரா பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தனது தமிழ்மணி அறக்கட்டளையின் மூலம் இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
அப்போது செய்தியாளர்கள் அவர்களை அவரை சந்தித்தனர். எடப்பாடி பழனிச்சாமி பதவி தற்காலிக பதவி என்று முதல்வர் பேசியது குறித்த கேள்விக்கு, எடப்பாடி பழனிச்சாமி நான்கரை ஆண்டு காலம் ஆட்சி செய்த முதல்வர். தற்போதைய முதல்வரின் தந்தை முன்னாள் முதல்வராக இருந்தவர் . கட்சித் தலைவராக இருந்தவர் .ஆனால் எடப்பாடி பழனிச்சாமி உழைப்பால் வந்தவர். படிப்படியாக உழைத்து முதல்வரானவர். அப்பாவுக்கு பின் வந்தவர் இல்லை என்றால் தடாலடியாக .
அவர் மேலும் பேசியபோது, தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. விரைவில் பொதுச் செயலாளராக ஆக இருக்கிறார் என்றார்.
முதல்வர் நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன் என்று சொல்கிறாரே? என்ற கேள்விக்கு, முதல்வர் ஜோக் அடிக்கிறார். அதற்கு சிரிக்கத்தான் செய்ய வேண்டும். நிமிடத்திற்கு நிமிடம் போட்டோவுக்குத் தான் போஸ் கொடுக்கிறார். டிவியில் வருகிறார். ஆனால் நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன் என்கிறார். வடிவேலு இல்லாத குறையை தமிழக அமைச்சர்களும் முதல்வர்களும் போக்குகின்றார்கள்.
மக்களுக்கு அல்வா கொடுத்த முதல்வர் இப்போது அரசு ஊழியர்களுக்கும் அல்வா கொடுத்துவிட்டார் என்றார்.
ஓபிஎஸ் உண்மை சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறாரே என்ற கேள்விக்கு, கடுப்பான செல்லூர் ராஜு, தேவையில்லாமல் கேட்கிறீர்கள் . சும்மா திரும்பத் திரும்ப இதையே கேட்டீங்களா? அதிமுக பத்தி கேட்கிறது என்றால் நான் பேட்டியே கொடுக்கல என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் .
பின்னர் ராகுல் காந்தியின் பாதயாத்திரை குறித்த பத்தி கேள்விக்கு, இப்படி கேள்வி கேளுங்கப்பா என்று ஆர்வமானார். ராகுல் காந்தியின் நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு நல்லதாக அமையுமா என்று தெரியவில்லை. ஆனால் ராகுல் காந்திக்கு நல்ல பெயரை தரும் என்றார்.