ஓபிஎஸ் உடன் ஆர்.பி உதயகுமார் சந்திப்பு - அதிமுகவில் அடுத்தகட்ட பரபரப்பு
அதிமுகவில் ஒற்றைத்தலைமை கோரிக்கை எழுந்துள்ள நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டில் 2 வது நாளாக அவரது ஆதரவாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இன்று, துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எம்.எல்.ஏ வைத்திலிங்கம், எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், ராஜ்யசபா எம்.பி. தர்மர், அதிமுக தென்சென்னை மாவட்ட செயலாளர் அசோக், தேனி மாவட்ட செயலாளர் சையது கான், நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ஓ.பி.எஸ் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கிரீன்வேஸ் சாலை அரசு இல்லத்தில் தங்கியுள்ள எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் ஒ.பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். சுமார் ஒன்றரை மணி நேர ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினேன். ஒற்றைத் தலைமை குறித்து மூத்த நிர்வாகிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர். எதுவாக இருந்தாலும் கட்சித் தலைமை முடிவெடுக்கும்” என்று பதிலளித்தார்