’’நீ உள்ளே போயிடுவ..சின்ன பையன்னு விட்டு வச்சிருக்கேன்.. ’’ -அண்ணாமலையை எச்சரிக்கும் ஆர்.எஸ்.பாரதி

 
ர்ச்

 அன்று கிருபானந்த வாரியாருக்கு ஏற்பட்ட கதிதான் இன்றைக்கு அண்ணாமலைக்கு ஏற்படும் என்று கடுமையாக எச்சரித்து இருந்த ஆர். எஸ். பாரதி மீண்டும் அண்ணாமலைக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.  நான் கேஸ் போட்டா நீ உள்ளே போக வேண்டியது வரும் . என் ஜாதகம் ரொம்ப மோசமானது.  ஏதோ நம்ம பையன் சின்னப்பையன் என்பதற்காக விட்டு வைத்திருக்கிறோம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.  இதற்கு, இந்த வெற்று மிரட்டல்களால் எந்த பயனும் இல்லை என்று  அண்ணாமலை பதிலடி கொடுத்திருக்கிறார்.

 திமுகவின் ஆட்சியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.  இதனால் திமுகவினர் தொடர்ந்து அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.  திமுகவை அமைச்சர்களின் ஊழல் பட்டியல் தன்னிடம் இருப்பதாக தொடர்ந்து சொல்லி வந்தார் அண்ணாமலை . இந்த நிலையில் திடீரென்று ஒரு ஊழல் பட்டியலையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 

ர்ச்

 அதுவரைக்கும் சாதாரணமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுகவினர் தற்போது அண்ணாமலை கடுமையாக எச்சரித்து,  அவரின் கைகளை வெட்டுவோம் என்கிற ரேஞ்சுக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.  

 அமைச்சர் தான் அன்பரசன்,  அண்ணாமலையை அவன் இவன், வாடா போடா என்று ஒருமையில் பேசியதோடு மட்டுமல்லாமல், பொறுக்கி என்று விமர்சித்திருந்தார். அண்ணாமலையை ஒரு வாரம் சிறையில் அடைத்தால்  கட்சியே வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஓடி விடுவார் . ரொம்ப ஆட்டம் போட்டா வாலை ஒட்ட அறுத்து சுண்ணாம்பு போட்டுவிடுவோம்.  ஒழித்துகட்டிவிடுவேன்,  நாறிப்போய்விடும் ஜாக்கிரதை. பார்த்து நடந்துகொள் என்று கடுமையாக எச்சரித்திருந்தார்.

 சீனியர்கள் நாங்கள் பேசுவதே இந்த அளவிற்கு இருக்கிறது என்றால் எங்களுக்கு கீழே உள்ள நிர்வாகிகளை பேசச் சொன்னால் இன்னும் மோசமாகிவிடும் என்று கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.  இதற்கு பாஜக தரப்பிலும் கடுமையான எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

க

 அமைச்சர்  அன்பரசனுக்கு  தமிழக பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் பதிலடி கொடுத்திருந்தார்.   பாஜகவினருக்கும் ஒருமையில் பேச தெரியும். ரவுடிகளை போல் பேசத் தெரியும் என்று சொல்லிவிட்டு பதிலுக்கு அமைச்சர் அன்பரசனை ஒருமையில் பேசினார்.

  அமைதிப்படை படத்தில் வரும் அமாவாசை கேரக்டரும் போல் கன்டோன்மென்ட் சண்முகம் எம்எல்ஏ வீட்டில் வேலை செய்து அவருடைய பதவியை காலி செய்துவிட்டு மாவட்டச் செயலாளரான அன்பரசன், சிறை என்றால் பெட்டிகளை தூக்கிக்கொண்டு போய்விடுவீர்களா?   பாஜக ஆளும் 17 மாநிலங்களில் உள்ள சிறைகளிலும் செல்ல தயாராக இருங்கள் என்றார்.  திகார் சிறைக்கும் செல்ல  தயாராக இருங்கள் என்றார்.

 தமிழக போலீசை மட்டும் நம்பி நீங்கள் இவ்வளவு பேசும்போது சிபிஐ ,வருமானவரித்துறை ,அமலாக்கத்துறை எல்லாம் வைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளவு பேசலாம் என்று எச்சரித்திருந்தார்.   எங்களுக்கும் ஏபிசி கேட்டகிரியில் பேசத் தெரியும். திமுக தலைவர் ஸ்டாலின் இடம் கேட்டுப்பாருங்கள் இரவோடு இரவாக தூக்கி சென்று விடுவார்கள் மரியாதையாக பேச கற்றுக் கொள்ளவும் என்று கடுமையாக  ஒருமையில் பேசி எச்சரித்திருந்தார்.

க்வ்

 இதன் பின்னர் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ வும் தற்போது திமுகவில் இருக்கும் கலையரசன் ,  திமுகவுக்கு எதிராக பேசினால் அண்ணாமலையின் கைகளை வெட்டுவேன் என்றார்.  இதற்கு தமிழக பாஜக செயலாளர் அஸ்வத்தாமன்,  பல்லுக்கு பல் கண்ணுக்கு கண் என்பது எல்லாம் பாஜகவினருக்கும் தெரியும் என்று எச்சரித்திருந்தார் .

அண்ணாமலைக்கு திமுகவினரின் எச்சரிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.   மீண்டும் ஆர். எஸ் .பாரதி அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் .  கிருபானந்த வாரியாருக்கு ஏற்பட்ட அதே கதி தான் அண்ணாமலைக்கு ஏற்படும் என்று எச்சரித்திருந்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தற்போது, 

’’என் ஜாதகம் ரொம்ப மோசமானது. நான் கேஸ் போட்டா நீ உள்ளே போய்டுவ.. ஏதோ நம்ம பையன் சின்னப்பையன் என்பதற்காக விட்டு வைத்திருக்கிறோம்.  நான் பிராமின் தலைவனாக இருக்கிறாய் என்பதற்காக விட்டு வைத்திருக்கிறோம்.  எல்லா பிராமினும்  ஒன்றாகக் கூடி விட்டார்கள் .  அண்ணாமலையை மூட்டை கட்டி தூக்கி போட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்கள்.  ஆற்காடு வீராசாமி யார் என்றே தெரியாது.  ஆனால் எழுதிக் கொடுத்ததை பேசுகிறார். அப்படித்தான் செய்வார்கள்.  எழுதிக்கொடுத்து சிக்க வைப்பார்கள் கூட இருந்து குழி பறிப்பார்கள்’’ என்று பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.


தமிழக முதல்வராக இருந்த அண்ணா உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோது அவருக்கு மருத்துவர் மில்லர் சிகிச்சை அளித்து வந்தார்.  அந்த காலகட்டத்தில் நெய்வேலியில் சொற்பொழிவாற்ற கிருபானந்தவாரியார் அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசியபோது,  ’’கில்லர் வந்துவிட்டால் மில்லர் வந்தாலும் காப்பாற்ற முடியாது’’ என்று பேசினார்.  கிருபானந்தவாரியாரின் இந்த வார்த்தை விளையாட்டு அண்ணாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மில்லரை குறிப்பிடுகிறது என்பதை புரிந்து கொண்ட திமுகவினர் கொதித்தெழுந்தனர்.   அப்போது திமுக தொண்டர்கள் சிலர் வாரியாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் கிருபானந்த வாரியாருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் அவர் பங்கேற்க இருந்த சொற்பொழிவுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டன.  கிருபானந்த வாரியாருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.   பின்னர் அப்போது திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர்.தான்  இதை சமாளித்தார் என்றும்,  தன் சொந்த செலவில் ஆன்மீக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து கிருபானந்த வாரியாரை அழைத்துப் பேச வைத்து சரி செய்தார் என்று தகவல்.   இதனால்தான் கிருபானந்த வாரியாருக்கு ஏற்பட்ட கதிதான் அண்ணாமலைக்கும் ஏற்படும் . அவர் நடமாட முடியாது.  இதுபோல் பேசிக்கொண்டிருந்தால் இனி நடமாட முடியாது எங்கேயும் சென்று பேச முடியாது என்று எச்சரித்திருந்தார்.   இந்த நிலையில்தான் மீண்டும் ஆர். எஸ். பாரதி இப்படி ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.  

ர்ச்

முன்னதாகவே அண்ணாமலை,  என் மீது வழக்கு போட்டால் அடுத்த ஊழல் பட்டியல் 10 மடங்கு அதிகமாக வெளியிடுவேன் என்று பதிலடி கொடுத்திருந்தார்.  தற்போது பாரதியின் எச்சரிக்கைக்கு,   ’’இந்த வெற்று மிரட்டல்களால் எந்த பயனும் இல்லை, ஆர்.எஸ் பாரதி அவர்களே!  மாநிலங்களவைக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த உங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே; ஆதலால் சாதி வெறுப்பைத்  விதைப்பதற்கு முயற்சி செய்து, காலம் கடத்திக் கொண்டு இருக்கின்றீர்கள். பாவம்! இது 1967 அல்ல! ‘’என்று  அண்ணாமலை என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.